விசுவாசத்தினாலே மோசே 58-0720M 1. சகோதரன் நெவில், உங்களுக்கு நன்றி. சபையோரே, காலை வணக்கம். இன்றைக்கு இங்கே கூடாரத்தில் இருப்பது நன்றாயுள்ளது. நான் சகோதரன் நெவில் அவர்களை இந்த காலையில் ஒருக்கால் பேச வைக்கலாமா என்று எண்ணினேன், நான் இன்றிரவு அதைச் செய்ய முயற்சிப்பேன். அதன்பின்னர் நான் பின்னால் பார்த்தபோது, இந்த காலைக்கான ஒரு ஞாயிறு பள்ளி வேதபாட பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்ன ஒரு…கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் இந்த ஞாயிறு பள்ளி வேத பாடம் நடத்த முயற்சிப்போம். 2 இப்பொழுது, நான் இங்கு வந்தது முதற்கொண்டே கிட்டத்தட்ட இப்பொழுது இரண்டு வாரங்களாகிவிட்டன. நீங்கள் புரிந்து கொண்டுள்ளபடி ஊழியக் களத்தில் நான் மிகவும் சோர்வுற்றிருக்கிறேன், நான் உண்மையாகவே, மேற்கொண்டு செல்ல முடியாதபடி உண்மையிலே களைப்புற்று போய்விட்டேன். ஆகையால் ஒரு சிறு ஓய்விற்காக நான் இங்கு வர வேண்டியதாயிற்று. எனவே நான் பிறந்த இடமான கென்டக்கியில் உள்ள உல்ஃப் கிரீக் டேம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நான் ஓய்வு எடுத்துக்கொண்டேன். அப்பொழுது நான், “ஓ, நான் இப்பொழுது அற்புதமாயிருப்பதை உணருகிறேனே. நான் அருமையாயிருக்கிறேனே” என்று எண்ணினேன். 3 நான் வீட்டிற்கு திரும்பியவுடன் என்னை சந்தித்த முதல் சிறிய காரியம் வருமான வரியினால் உண்டான ஒரு அரசாங்க விவகாரமாயிருந்தது. அப்பொழுது நான் மீண்டும் முற்றிலும் நிலைகுலைந்து போய்விட்டேன். எனவே என்னை இளைப்பாறச் செய்ய இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் தேவைப்படப் போகிறது என்பதை நான் தெளிவாய் உணர்ந்தேன். 4 என்னுடைய ஊழியமோ இப்பொழுது மாற்றத்திற்கு ஆயத்தமாயிக்கொண்டிருக்கிறது. நான் திட்டமிடப்பட்ட கூட்டங்களையோ உடையவனாயில்லை. அந்தக் காரணத்தினால் தான் நான் ஒரு விதமாய் தனிமையாய் அடுத்த சில வாரங்களிலும் ஓய்வெடுத்துக்கொள்ள, முழுமையான ஓய்வினை எடுத்துக் கொள்ளவும், கர்த்தர் பேரில் காத்திருக்கலாம் என எண்ணினேன். 5 இங்குள்ள ஜனங்களாகிய உங்களில் அநேகர், பண்டைய காலத்தவர்கள், நீண்டகாலமாக எங்களோடிருந்து வருகிறவர்களாகிய நீங்கள், கர்த்தர் நமக்கு என்ன கூறியிருக்கிறார் என்பதையும், அவர் என்ன செய்வதாக கூறினாரோ அதை எப்பொழுதுமே அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்பதையும் நினைவில் வைத்திருப்பீர்கள். 6 இங்கே சபையில் துவக்கத்தில், நாம் அந்தக் காலை மூலைக்கல்லை கூடாரத்தில் வைத்தபோது, எப்படி அவர்…அதில் எழுதப்பட்டிருந்ததையும், அந்த கல்லை வைத்ததையும், என்னுடைய வேதாகமத்தின் கடைசிப்பகுதியில் உள்ள காலியான பக்கத்தில் எழுதப்பட்டதையும் நினைவில் வைத்திருப்பீர்கள். அந்தக் காலை, அந்த மகத்தான தரிசனத்தில், “இது உன்னுடைய கூடாரமல்ல” என்று கூறப்பட்டது. 7 அப்பொழுது நான், “அது எங்கே உள்ளது கர்த்தாவே?” என்று கேட்டேன். அவர் ஆகாய்த்திற்கு கீழே நிற்க வைத்தபோது ஒரு சத்தம் உண்டானது. அப்பொழுது நான் நோக்கிப் பார்த்தபோது, அந்த மூன்று சிலுவைகளையும், மரங்கள் மற்றும் அவைகளின் கனிகளைப் போலக் கண்டேன். அந்த தரிசனம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அநேக ஆண்டுகளுக்கு முன்பே அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. 8 அன்றொரு நாள் அங்கிருந்த ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்து, கர்த்தர் கூறியிருந்ததையும், முன்கூட்டியே கூறியிருந்து, அது ஏற்கெனவே நிறைவேறிவிட்டிருந்ததைக் குறித்து எழுதி வைத்திருந்த சில காரியங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த இளைஞருக்குரிய காரியத்தைக் குறித்தும், யுத்தம் எப்படி உண்டாகும் என்பதைக் குறித்தும், அந்த எல்லா காரியங்களும் நிறைவேறியுள்ளன. 9 அந்த மகத்தான தீர்க்கதரிசனங்களில் இரண்டு காரியங்களே விடப்பட்டிருக்கின்றன. அது தொலையியக்கி (Remote Control) மூலம் முட்டை வடிவம் போல் காணப்படும் கார்கள் வீதியில் ஓட வேண்டியதாயுள்ளது. நீங்கள் அதை ஓட்ட வேண்டியதில்லை. அது தன்னையே கட்டுப்படுத்திக் கொள்கிறது. அதன்பின்னர் ஒரு மகத்தான ஸ்திரீ எழும்புவாள், ஏனென்றால் அமெரிக்கா ஒரு ஸ்திரீயின் தேசமாயுள்ளது. அது…ஒரு மகத்தான ஸ்திரீ எழும்பி ஜனாதிபதியாகவோ அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்றாக இந்த தேசத்தில் இருப்பாள். அதன்பின்னரே ஒரு முழு அழிவு உண்டாகும். முழு தேசமும் துடைத்தழிக்கப்படும். 10 அதாவது நான் முன்னுரைக்கிறேன்…இப்பொழுது இது கர்த்தர் கூறுகிறதல்ல. (மற்றொன்று, ஸ்திரீயைக் குறித்ததோ கர்த்தர் உரைத்ததாகும்.) ஆனால் 1977-ம் ஆண்டுக்கு முன்னர் உலகமானது முழு அழிவினை சந்திக்கும் என்று நான் 1933-ல் முன்னறிவித்தேன். 11 எனவே, இப்பொழுது அவர்கள் பெற்றுள்ளதைப் போன்று, அப்பொழுது இதை அழிக்கக் கூடிய ஏதாவது ஒன்றை உடையவர்களாயிருந்தார்களா என்று எனக்கு தெரியாமலிருந்தது. ஆனால் நான் தேசமானது முழு அழிவில் இருப்பதையும், மரங்களின் அடிப்பகுதிகள் மற்றும் அதைப்போன்ற காரியங்கள் மட்டுமே விடப்பட்டிருந்ததைக் கண்டேன். 12 எனவே அது அதனுடைய பாதையில் உள்ளது. அவர் கூறினது போல இந்த மற்றக் காரியங்கள் நிறைவேறியிருக்கிறதென்றால், இதுவும் கூட நிறைவேறும். இங்கே வேதத்தில் அவர் கூறினது போல, அவர் என்ன கூறுகிறாரோ, அது நிறைவேறும். கிறிஸ்து முதல் முறை வந்தாரென்றால், அவர் இரண்டாம் முறையும் வருவார். அவர் கூறின எல்லாக் காரியங்களும் நிறைவேறும். முறையாக இதைக் காண்கையில், நம்முடைய எண் கிட்டத்தட்ட அழைக்கப்பட உள்ளது என்பதை…அறிந்து கொள்கிறோம், ஒரு தேசமாய் உள்ள நாம் சபையானது அதனுடைய எடுத்துக் கொள்ளப்படுதலில் கிட்டத்தட்ட எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்பதை அறிந்திருக்கிறோம். அது நாம் இந்த நாளில் இருப்பதையும், நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற நேரத்தையும் அறிந்துகொள்ள ஒரு ஊழியக்காரரின் இருதயத்தையோ அல்லது எந்த சபை அங்கத்தினனையோ ஏவுகிறது. பூமியில் எந்த ஒரு நபரும் எப்போதும் வாழ்ந்து வந்ததிலேயே மகத்தனாய் நேரமாய் இது இப்பொழுது உள்ளது; அது சபைக்கானதாய் உள்ளது. எனவே நான் நிச்சயமாகவே உங்களுடைய ஜெபங்களை வாஞ்சிக்கிறேன். 13 அதன்பின்னர் நான் கூடாரத்தில் கண்டேன், அதாவது ஏதோ ஒரு குழு மற்றும் அது போன்றவற்றிற்காக அவர்கள் நடத்தப் போவதாயிருந்த சில மறு வாக்கெடுப்புகளை மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் சபையில் கண்டேன். 14 சபைக்கு ஒரு சிறு கூட்டம், ஒரு சிறு எழுச்சி தேவைப்பட்டது. நீங்கள் எப்பொழுதுமே எனக்கு தயவாயும், ஆசீர்வாதமாயும் இருந்து வருகிறீர்கள். நான் இங்கிருப்பதனால் உங்களுக்கும் அது ஒரு ஆசீர்வாதமாயிருப்பதுபோல் தென்படுகிறது. நான் நிச்சயமாகவே உங்களோடிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதமாய் இருந்து வருகிறது. நான் தேவன் மூலமாக அதைக் கண்டபடியால், நான் கூறினது சத்தியமாயிருக்கும் என்று நீங்கள் எப்பொழுதுமே ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நான்—நான் அதைப் பாராட்டுகிறேன். 15 ஆகையால் அதன்பின்னர் நான் நம்முடைய சபையை உள்ளே சீர்படுத்தவும், உள்ளே உள்ள அதனுடைய குழுக்களை சீர்படுத்தத் துவங்கி, அதன்பின்னர் தேர்தல்கள் முதலியனவற்றை நான் கண்டறிய வேண்டியிருந்தது. அதன் பிறகு—அதன் பிறகு நான் ஊழியக் களத்திற்கு மீண்டும் திரும்பும் முன்னர் வெளியே புறப்பட்டு சென்று, ஒரு சிறு ஓய்வினை எடுக்கலாம் என்று நான் எண்ணினேன். 16 இதை உங்களுக்குள்ளாக மாத்திரம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இதை வெளிப்புறத்திலுள்ளவர்களாக கூறவில்லை. இது இந்த கூடாரத்திற்காக மாத்திரமேயாகும். நாம் இந்த கூடாரத்தில் ஒரு கூட்டம் நடத்த விரும்புகிறோம், எனவே அது ஒவ்வொரு காரியத்தையும், ஒவ்வொரு பிழையையும், தொடர்ந்து நடந்து வருகிற எல்லாக் காரியங்களையும், ஒருவருக்கொருவர் சிறு வித்தியாசமான உணர்வுகளைக் கொண்டிருக்கலாம்; நான் அவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, அவர்கள் முகமுகமாய் சந்திக்கும்படி கொண்டு வரப் போகிறேன். எனவே நீங்கள் அதை சந்திக்க விரும்பவில்லையென்றால், நீங்கள் இந்த தேசத்தைவிட்டு சென்றுவிடுவது மேலானதாகும்; ஏனென்றால் நீங்கள் அதனுடைய ஒவ்வொரு சிறு சிறு காரியத்தையும் முகமுகமாய் சந்திக்க வருகிறீர்கள், நாம் அதை இங்கே கூடாரத்தில் வழக்கமாக செய்து வருவதுண்டு. எல்லாருமே மென்மையானவர்களாய் இருக்க வேண்டும், ஏனென்றால் நாம் ஆசீர்வாதங்களின் மேஜையண்டையிலே இராபோஜனத்தில் கிறிஸ்துவின் சரீரத்தைப் பிட்கிற சகோதர சகோதரிகளாக இருக்கிறோம். தவறாக இருக்கும் எந்தக் காரியத்தையும் உருவாக்குவது, வேறுபட்ட உணர்வுகளை உண்டாக்க காரணமாயிருப்பது அல்லது சீரழித்துப் போட அல்லது அது போன்ற எந்தக் காரியத்தையும் செய்வது பிசாசேயல்லாமல் வேறொன்றுமில்லை. நான் நம்முடைய சகோதரன் நெவில் அவர்களை அழைத்துக் கொண்டு போகப் போகிறேன். நாங்கள் ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொருவரிடம் சென்று ஒன்று சேர்த்து முன்பிருந்த பழைய கூடாரத்தைப் போன்று மீண்டும் நிறுவப்பட்டு, அதனுடைய உதவியிலே உறுதியாய் நின்று தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக தொடர்ந்து செயல்படும்படி செய்யப்போகிறோம். இப்பொழுது நான் இதைக் கூறியிருப்பதற்கான காரணம் இதுவேயாகும், ஏனென்றால் இங்கே இந்தக் காலையில் நம்முடைய சொந்த சிறு குழுவோடு உள்ளோம் என்பதினாலேயாகும். 17 இப்பொழுது நான் சற்று இளைப்பாறிவிட்டு, என்னால் முடிந்தளவு துரிதமாக திரும்பி வந்துவிடப் போகிறேன். அதன் பின்னர் நான் ஊழியக் களத்திற்கு மீண்டும் செல்லும்படி எதிர்பார்க்கிறேன். இந்த நேரத்தில், கர்த்தருக்குச் சித்தமானால், நாம் சேகரித்து திரட்டி வைத்துள்ள நிதியில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு, நானாகவே வெளியே…இந்த அயல் நாட்டு ஊழிய நிகழ்ச்சிக்குப் போக விரும்புகிறேன். ஒரு புதிய கூடாரத்தையும், சில புதிய உபகரணங்களையும் வாங்கிக் கொண்டு ஊழியக் களத்தில் ஊழியத்தை துவங்க விரும்புகிறேன். சபையிலிருந்து சபைக்குச் செல்லாமல், நம்முடைய சொந்த கூட்டங்களுக்கு செல்லாமென்றிருக்கிறேன். 18 இப்பொழுது என்னை அழைத்துள்ள சகோதரரைப் புறக்கணித்து பிராச்சாரம் செய்ய அல்ல, என்னை அழைத்துள்ளது அற்புதமாயுள்ளது. ஆனால் அதைக் குறித்த பெரும்பாலான எல்லாவற்றையும் நீங்கள் இந்த கூட்டங்களில் கண்டறிகிறீர்கள். நீர் அங்கிருக்கப் போகிறீர் என்று அவர்கள் கூறுகின்றனர், அதன் பின்னர் உங்களுடைய எல்லா நண்பர்களும் உள்ளே வருகின்றனர், அப்பொழுது பணம் பறித்தலுக்கான புகழ்ச்சி உரையே உண்டாகிறது. அது அந்த ஜனங்களின் பணத்தை செலவழித்தாயிருக்கிறது. நீங்கள் பாருங்கள், நான் அதை வெளியேக் கண்டறியத் துவங்குகிறேன். எனவே அது—அது சரியானதல்ல. நாம் அவர்களை அழைத்து வரக் கூடிய ஒரு ஸ்தலத்தை நாம் உடையவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய பணத்தைக் கொண்டு வர வேண்டியதில்லை. நீங்களாகவே வந்து கர்த்தரை சேவியுங்கள். புரிகிறதா? எனவே இப்பொழுது… 19 இப்பொழுது என்னுடைய ஊழியம் ஒரு மாற்றத்தைக் கொண்டுள்ளது. நான் முன்பெல்லாம் ஒரு நபருடைய கரத்தைப் பற்றிப் பிடித்து அங்கே நிற்கும்போது, அவர்களுடைய கோளாறு என்னவாயிருந்தது என்பதை கர்த்தர் எனக்கு கூறிவிடுவார். “அதன்பின்னர் நீ ஜனங்களின் இருதயத்தின் இரகசியத்தை அறிந்துகொள்வாய், அது நிறைவேறும்” என்றார். அது கூறப்பட்ட விதமாகவே சரியாக பிழையின்றி சம்பவித்துள்ளதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள். இப்பொழுது இதுவோ அதற்கடுத்தபடியாயுள்ளது, அது தீர்க்கதரிசனமாயுரைக்கப்பட்டு, முன்னுரைக்கப்பட்டுள்ளது, எனவே அது எந்த ஒரு காரியத்திற்கும் அப்பாற்பட்டதாயிருக்கப்போகிறதை நீங்கள் காண்பீர்கள், அது இப்பொழுது மாற்றத்தில் உள்ளது. 20 அந்தக் காரணத்தினால்தான் சாத்தான் என்னோடு வருமான வரியினால் போராடி, நான் ஊழியத்திற்குள் பிரவேசித்த இருபத்தேழு ஆண்டுகாலமாகவே ஒரு ஊழியக்காரன் என்ற முறையில் நான் எடுத்த ஒவ்வொரு பைசாவிற்கும் நான் அரசாங்கத்திற்கு வரி செலுத்த கடன்பட்டிருக்கிறேன் என்று என்னிடம் கூற முயற்சிக்கிறான். அது அவ்வாறு அல்லவே, ஏனென்றால் அது இங்கே சபையினூடாக சென்றுவிட்டது. 21 நான் இந்த சபையின் தருமகர்த்தாவாக இருக்கிறேன். அது முற்றிலும் சரியே. அது இங்கே ஆவணங்களில் உள்ளது. எனவே, நான் இந்த சபையின் தர்மகர்த்தா- பொருளாளராயிருந்தால், அப்பொழுது அதை ஒன்றுமே செய்யமுடியாது…அரசாங்கத்திற்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. அவர்கள் சபையை கேள்வி கேட்டுக்கொண்டிருக்கவில்லை. சபையின் பொருளாளராயிருக்கிற என்னையே அவர்கள் கேள்விக்கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தர்மகர்த்தாக்கள் அங்குள்ள வங்கியிலுள்ள ஒரு ஆவணத்தாளில் கையொப்பமிட்டுள்ளனர், அதாவது என்னுடைய எல்லா நிதிகளும்…என்னுடைய சொந்த வருமானத்திற்கானதாயிருப்பதற்குப் பதிலாக, அது இங்கே என்னுடைய சபையினூடாக சென்றுள்ளது, ஏனென்றால் அது தானாகவே எப்படியாயினும் ஒரு ஆதாரமாய் உள்ளது. 22 அதைச் செய்வதோ சபையிலிருந்து நான் ஓடாமலிருக்க, அதைவிட்டு விலகி வெளியே போய், இங்கே ஒன்றுமில்லாதிருப்பதிலிருந்து தடுக்க உதவி புரிகிறது. நான் சில காலம் கழித்து சபைக்கு திரும்பி வந்து அவர்களுக்கு உதவி செய்வேன் என்று நான் ஜனங்களுக்கு வாக்களித்தேன். அந்தக் காரணத்தினால்தான் நான் அதை அந்தவிதமாக காத்துக்கொண்டேன், ஏனென்றால் ஜனங்களாகிய உங்களுக்கு நான் ஒரு வாக்குப்பண்ணினேன். அந்தக் காரணத்தினால் நான் தனிப்பட்டவராயிருப்பதற்குப் பதிலாக அந்தவிதமாகவே அதனோடு தரித்திருக்கிறேன். அதன் பின்னர் நீங்கள் அதை செய்வீர்களானால், அது ஸ்தாபனத்திற்கு செய்வதுபோலாகிவிடும். நான் உறுதியாக ஸ்தாபனத்திற்கு எதிராக உள்ளேன். எனவே நாம் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக முன்னேறிச் செல்லும்படியாக தேவனுடைய கரங்களில் அது இருக்கிறவிதமாகவே அதை நான்—நான் காத்துக் கொள்வேன். 23 இப்பொழுது இந்த காலையில், நாம் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பண்டைய வார்த்தையை ஆய்ந்து படிக்கவும், விசுவாசிக்கவும் விரும்புகிறோம். 24 இப்பொழுது நான் இதையும் கூட கூற விரும்புகிறேன்…அன்றொரு இரவு நாம் நம்முடைய தர்மகர்த்தாக்களினுடைய கூட்டத்தை நடத்திய பிறகு நான் இங்கு சகோதரன் ஈகன் அவர்களையும், அநேகரையும், இங்கு அமர்ந்துள்ள தர்மகர்த்தாக்கள் சிலரையும் காண்கிறேன்; அதாவது நீங்கள் ஒவ்வொருவரும் தர்மகர்த்தாக்களாக நியமிக்கப்படவில்லை என்றும், நீங்கள் தர்மகர்த்தாக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, உங்கள் பெயர்கள் புத்தகப் பதிவேடுகளில் உள்ளன என்பதை நான் சபையோருக்கு முன்பாக வெளிப்படையாக கூறுகிறேன், அது உண்மையே. சரி. 25 இப்பொழுது அவர்கள் கண்காணிகள் முதலானோரின் தேர்தலை நடத்தப் போகிறார்கள். நாம் சபையில் அமர்த்தும்படியாக, பொருளாளர் இன்னும் மற்றுமுள்ளோரையும், சகோதரன் நெவில் இந்த ஆராதனைக்குப் பிறகு உடனடியாக அவர்களை அழைப்பார். சரி. எல்லா பிண்ணனிகளையும் ஆயத்தப்படுத்திக்கொண்டு, அதன்பின்னர் நாம் அந்த வருகிறதான ஒரு எழுப்புதலை நடத்தலாம். 26 இப்பொழுது, நாம் நம்முடைய ஞாயிறு வேதபாட பள்ளி பாடமாக இந்த மகத்தான ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்கு இங்கே நாம் பக்கங்களை திருப்புவதற்கு முன்பு, நாம் இந்த புத்தகத்தின் ஆக்கியோனிடத்தில் பேச ஒரு சில நிமிடங்கள் நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. இப்பொழுது ஒரு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள தடையாயுள்ள முரண்பாடான ஒவ்வொரு காரியத்தையும், ஒவ்வொரு சிந்தனையும் ஒரு புறம் தள்ளி வைப்போமாக. நாம் ஜெபம் செய்வோமாக. 27 மகா பரிசுத்தமும், நீதியுமுள்ள தேவனே, உம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட கம்பீரமான பிரசன்னத்திற்குள்ளாக நாங்கள் இப்பொழுது வந்து, உம்மண்டை எங்களுடைய ஜீவியங்களையும், எங்களுடைய—எங்களுடைய ஆத்துமாக்களையும் எங்களுடைய சரீரங்களையும், எங்களுடைய ஊழியங்களையும், எங்களுடைய திறமைகளையும் அளிக்க முன்வருகிறோம். நாங்கள் பெற்றுள்ள எல்லாவற்றையும், நாங்கள் அவைகளை உம்மிடத்தில் அளிக்கிறோம். கர்த்தாவே, நீர் எங்களை நோக்கிப் பார்க்கையில், எந்தப் பாவமாவது வெளியரங்கமாய், அறிக்கை செய்யப்படாததாய்க் காணப்படுமாயின், ஓ தேவனாகிய கர்த்தாவே, அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு உம்முடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தை நீர் பூச வேண்டும் என்று நாங்கள் உம்மை வேண்டிக்கொள்கிறோம். ஏனென்றால் நாங்கள் எங்களுக்குள்ளே குறைவுள்ளவர்களாயும், நாங்கள் எங்களையே காத்துப் பேணிக்கொள்வது கூடாத காரியமாயுள்ளது என்பதையும் தெளிவாக உணருகிறோம். ஆனால் என்றோ ஒரு நாள் உம்முடைய பிரசன்னத்திற்குள்ளாக தைரியமாய் வருவதற்கு நாங்கள் அபாத்திரமான பாவிகள் என்பதால், எங்களுடைய கணக்கிற்கு அவருடைய கிருபையை அளிக்கக்கூடிய அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மேல் நாங்கள் முழுமையாக நம்பிக்கை வைத்து எங்களை கர்த்தராகிய இயேசுவின் இந்த இரத்தத்திற்கு முன்னே கொண்டு வருகிறோம். நீர் கடந்த காலங்களில் அதை உம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இரத்தம் என்பதை அங்கீகரித்து, “நாங்கள் எங்களுடைய பாவங்களை அறிக்கை செய்தால், அவர் மூலமாக, அவருடைய கிருபையினால் நீதிமான்களாக்கப்படுவோம்” என்று நீர் வாக்களித்திருக்கிறீர். 28 இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எந்த தவறையும், எந்த பாவத்தின் அக்கிரமத்தையும், அல்லது செயல்படுத்தாமல் விடுபட்டதையும், மீறுதலையும், எங்களுடைய ஆத்துமாவில் எந்த பொல்லாத சிந்தனையாவது பிசாசின் அக்கினியாஸ்திரங்களால் ஊடுருவியிருக்குமானால், நீர் உம்முடைய ஜனங்களின், உம்முடைய சத்துருவான இந்த பொல்லாங்கனை விரட்ட வேண்டும் என்றே நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். 29 இந்த நேரத்தில் வார்த்தையைப் பற்றிக்கொள்ளும்படி, நாங்கள் எங்களையே கருவிகளாக அளிக்கையில், நீர் எங்கள் மூலமாகப் பேச, உமது வாத்தையை எங்கள் மூலமாய்க் கேட்க நீர் பரிசுத்த ஆவியை அனுப்ப வேண்டும் என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். நாங்கள் அதை உம்மிடத்திலிருந்து பெற்றுக் கொண்டவர்களாய், இந்த இடத்தைவிட்டு, இன்றைக்கு கிறிஸ்துவின் நிமித்தமாக நாங்கள் மீண்டும் சரிபடுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வோடும், பரிசுத்த ஆவியானவரின் சந்திப்பினிமித்தமாக நாங்கள் இன்றிரவு மற்றும் நாளை ஆராதனைக்கு சிறந்த பொருத்தமுடையவர்களாக திரும்பிச் செல்வோமாக. 30 எங்குமுள்ள எங்களுடைய சகோதரர்களையும், உலகத்தை சுற்றியுள்ள சபைகளையும், இந்த பொல்லாத நாட்களில் ஜீவ வார்த்தையைப் பிடித்துக்கொண்டிருக்கிறவர்களையும் ஆசீர்வதியும். கிரியை செய்யும்படியாக அதிக நேரம் விடப்படவில்லையென்று நாங்கள் உணருகிறோம், ஏனென்றால் இராக்காலம் துரிதமாக வந்து கொண்டிருக்கிறது. யுத்த மேகங்கள் மீண்டும் மிதந்து கொண்டிருக்கின்றன. பொல்லாங்கு சமீபித்துவிட்டது, நாங்கள் இதற்கு முன்பு ஒருபோதும் கிரியை செய்யாத அளவிற்கு இப்பொழுது கிரியை செய்ய நீர் அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே களைப்புற்ற எங்களுடைய சரீரங்களை இளைபாறச் செய்து, மீண்டும் யுத்தத்திற்கு எங்களை அனுப்பும். நாங்கள் இதை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொண்டு, அவர் நிமித்தமாகவே நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 31 நாம் இந்தக் காலையில் வேதாகமத்தில் எபிரெயரின் புத்தகம் 11-ம் அதிகாரத்துக்கு திருப்புவோம். 32 புதன் கிழமை இரவு நாம் எபிரெயரின் புத்தகம் 7-வது அதிகாரத்தில் “மெல்கிசேதேக்கு, தகப்பனும், தாயுமில்லாதவன் என்றும், நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமுடையவனாயிராமிலிருப்பதைக்” குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். 33 ஒருக்கால் இந்தக் காலையில் முந்தின வேத வாசிப்புகளில், நாம் கூற விரும்புகிறதற்கான பின்னணிகளை நாம் பெற்றுள்ளபடியால் இந்த அற்புதமான புத்தகத்தை மீண்டும் திறப்பது உரியதாயிருக்கும் என்று நான் எண்ணினேன். 10-வது அதிகாரத்திற்கு தாண்டிச் சென்று, அதாவது 9-வது அதிகாரத்தில் பலியிடும் பிரமாணங்கள் உள்ளன, நாமோ “விசுவாசம்” என்ற ஒரு இடத்திற்குள்ளாக வருவோம். இங்கே எபிரேயரின் புத்தகத்தில் உள்ள 11-வது அதிகாரத்தில் 23-வது வசனத்திலிருந்து துவங்கி நாம் இந்தவிதமாக அதை வாசிப்போம்: மோசே பிறந்தபோது அவனுடைய தாய் தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்து வைத்தார்கள். விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். 34 இந்தக் காலையில், “விசுவாசத்தினாலே தெரிந்து கொள்ளுதல்” என்ற பொருளை நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். நான் 23-ம் வசனத்தில் உள்ள முதல் மூன்று வார்த்தைகளான, விசுவாசத்தினாலே மோசே என்ற ஒரு பாடப் பொருளையே நான் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். “விசுவாசத்தினாலே தெரிந்துகொள்ளுதல்” பெரும்பாலும் நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும், நாம் விசுவாசத்தினாலே தெரிந்து கொள்ள வேண்டும். மோசே செய்ததாக நாம் கண்டறிகிற எல்லாவற்றிலும், அது விசுவாசத்தினாலே என்றே திரும்ப திரும்ப மதிப்பிடப்படுகிறது; தரிசிப்பதனால் அல்லாமல் விசுவாசத்தினாலேயே. 35 அந்தக் காரணத்தினால்தான் நான் இதை இந்தக் காலையில் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால் இந்த நிலையில்தான் சபையானது…நம்முடைய பள்ளிகளும் கூட இருந்து வருகின்றன, நாம் சுற்றிலும் அதிகப்படியான விஞ்ஞானப் பூர்வமான உபதேசத்தையே பெற்றுள்ளோம். இதன் காரணமாக நாம் விசவாசத்திலிருந்து ஜனங்களை தூர இழுத்துவிட்டிருக்கிறோம். இப்பொழுது, விசுவாசமானது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்படுகிறதில்லை. விஞ்ஞானம் காணததே விசுவாசமாயுள்ளது. நாம்…நாம் இந்த மகத்தான விசுவாசத்தை எப்போதாவது இழப்போமானால், அப்பொழுது நாம் முழுமையான அந்தகாரத்தில் இருக்கிறோம், அது…நாம் எவ்வளவு நன்கு கல்வி கற்றிருந்தாலும், நம்முடைய சொந்த வழியின் விசுவாசத்திற்கு பொருத்தமுடையதாக்க தேவனுடைய வார்த்தையை நாம் எப்படி விளக்கிக் கூற முடிந்தாலும் அது ஒரு பொருடல்ல. 36 விசுவாசத்தினாலே மாத்திரமின்றி தேவனைப் பிரியப்படுத்த வேறு எந்த வழியுமேக் கிடையாது. அது அந்த வழியில்தான் என்றும், அது விசுவாசத்தினால் என்று வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்று வேதம் உரைக்கிறது. 37 எனவே விசுவாசமானது விஞ்ஞானத்தோடு இணங்காதிருந்தால், விஞ்ஞானமானது விசுவாசத்தோடு இணங்காதிருந்தால், அவைகள் ஒவ்வொன்றும் ஒரு விளிம்பில் வைக்கப்படும்போது, அப்பொழுது மோசே செய்தது போன்ற ஒரு தெரிந்து கொள்ளுதலை நாம் செய்ய வேண்டும். விசுவாசத்தினாலே நாம் விசுவாசிக்கிறோமே! 38 இப்பொழுது, நாம் விசுவாசத்தை இழப்போமானால், அப்பொழுது நாம் ஒரு ஜெபத்திற்கு தேவனால் பதிலளிக்கப்படுவதைப் பெற்றுக்கொள்ளமாட்டோம். “ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” எனவே, நாம் விசுவாசத்தை இழப்போமானால், நம்முடைய ஜெபங்கள் ரத்துசெய்யப்படுகின்றன; நாம் எங்கும் எதையும் பெற்றுக்கொள்வதில்லை. 39 எனவே இந்தக் காலையில் நாம் சிந்திக்கக் கூடியதெல்லாம் விசுவாசத்தைப் பற்றிக்கொள்வதென்பதேயாகும். ஆகையால் விசுவாசத்தை இழப்போமேயானால், நம்முடைய நம்பிக்கை யாவும் போய்விடுகிறது. நாம் விசுவாசத்தை இழப்போமானால், நம்முடைய ஆவிக்குரிய மெய்மை யாவுமே போய்விடுகிறது. ஏனென்றால் நீங்கள் காண்கிற காரியங்களில் விசுவாசங்கொள்ள முடியாது, ஏனென்றால் நீங்கள் காண்கிற காரியங்கள் யாவும் அழியக்கூடியவனாயிருக்கின்றன. 40 நாம் ஏதோ ஒரு மகத்தான நபரை, ஒரு மகத்தான ஊழியக்காரரை அல்லது ஒரு பெரிய சபையை நோக்கிப் பார்ப்போமேயானால், அவையாவுமே என்றோ ஒரு நாள் அழிந்துபோகும். நாம் ஒரு பெரிய தேசத்தை அல்லது ஒரு பெரிய ஆயுதத்தை நோக்கிப் பார்ப்போமேயானால் அவைகள் யாவும் என்றோ ஒரு நாள் அழிந்து போகும். ஆகையால் நாம் விசுவாசத்தினால் ஜீவிக்க வேண்டும், விஞ்ஞானம் அந்தக் காரியங்களைக் குறித்து தெரிவிக்கிறதில்லை. அது நாம் விசுவாசிக்கிற விசுவாசத்தினாலேயாகும். 41 இப்பொழுது, நாம் விசுவாசத்தை இழப்போமானால், நாம் நம்முடைய மகிமையை இழந்து விடுவோம். இப்பொழுது, நாம் விசுவாசத்திலிருந்து விலகிச் செல்வோமானால், அப்பொழுது நாம் சபையை ஒரு அறிவாற்றலுள்ள மண்டலத்திற்குள்ளாகக் கொண்டு செல்கிறோம். 42 அநேக சமயங்களில் சபையோர் பெரிய அளவிலிருந்தனர் என்றும், அவர்கள் பெரிய சபைகளை உடையவர்களாயிருந்தனர் என்றும், பெரிய கூரான கோபுரங்களையும், ஒரு பெரிய, நன்கு உடை உடுதியிருக்கின்ற ஏராளமானோர் மற்றும் சீரான ஜனங்கள், ஏராளமான பணம், அவர்களால் குறிப்பிட்ட காரியங்களை அளிக்க முடியும் என்ற ஒரு காரணம் ஜனங்களுக்கு மத்தியில் எண்ணமாயிருந்து வருகிறது, நாம் அநேக சமயங்களில் அது எழுச்சியூட்டப்பட்டிருந்தது என்றும், இந்த குறிப்பிட்ட சபை எழுச்சியூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டோம். இல்லையென்றால் நாம் ஊழியக்களத்தில் பல்வேறுபட்ட ஊழியர்களையும், பெரிய கூடுகை கொண்ட கூட்டத்தார்களையும் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளோம், அவர்கள் ஆவிக்குரிய ஏவுதலின் அடையாளங்களாயிருக்கிறார்கள் என்று சில நேரங்களில் நாம் எண்ணுகிறோம். ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல. அது மானிட அகத்தூண்டுதலாயுள்ளது. 43 ஆனால் உண்மையான ஆவியின் ஏவுதல் தேவனுடைய சித்தத்தை செய்கிறதினால் உண்டாகிறது. புரிகிறதா? அது ஒருவராயினும் அல்லது ஒரு சிலராயிருந்தாலும் சரி. அது ஒரு பெரிய சபையாயிருந்தாலும் அல்லது ஒரு சிறிய சபையாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர் ஒரு பெரிய, சொல்திறமிக்க பேச்சாளராயிருந்தாலும் அல்லது தன்னுடைய மொழியின் முதல் எழுத்துக்களையே அறியாதவராயிருக்கிற மனிதனாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர் கொண்டு வருகிற செய்தியோ, அது தேவனுடைய வார்த்தையினால் ஏவப்பட்டிருக்கிறதா அல்லது அது மானிட ஏவுதலின் அறிவாற்றல்லுள்ள கருத்துக்களினால் ஏவப்பட்டுள்ளதா என்பதைச் சார்ந்ததாயுள்ளது. 44 சில ஜனங்கள் சொல்திறமிக்க ஒரு பேச்சாளரின் காரணமாக ஏவப்படக்கூடும். அது அதை சரியாக்குகிறதில்லை. சில நேரங்களில் ஒரு மனிதன் மிகவும் பயிற்றுவிக்கப்பட்டு தன்னுடைய செய்தியை மிக நுட்பமாய் சுட்டிக்காட்டுகின்ற காரணத்தால் அவர்கள் ஏவப்படுகின்றனர். அது தேவனுடையது என்று அதை பொருட்படுத்துகிறதில்லை. புரிகிறதா? 45 அது தேவனுடைய நித்திய, ஆசீர்வதிக்கப்பட்ட நித்திய வார்த்தையினூடாக மாத்திரமே நாம் ஆவியின் ஏவுதலிப் பெற்றுள்ளோம், அது பரிசுத்த ஆவியினால் கொடுக்கப்படுகிறது. விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக்கொள்கிறோம். 46 இப்பொழுது நாம் மோசேயைக் குறித்தும், அவனுடைய ஜீவியத்தின் இந்த மகத்தான நேரத்தைக் குறித்தும் சிந்தித்துப் பார்ப்போம். நாம் அவனுடைய பிறப்பைக் குறித்து சற்று முன் வாசிக்கையில், தேவன் அவனை எப்படி பாதுகாத்தார் என்று பார்த்தோம், ஆனால் மோசேயினுடைய ஜீவியத்தில் ஒரு தெரிந்து கொள்ளுதலை அவன் செய்ய வேண்டிய ஒரு நேரம் உண்டானது, நாம் சரியாக வாசிப்போமானால், அவன் பார்வோன் குமாரத்தியின் மகனாயிருந்து, சிங்காசனத்திற்கு சுதந்திரவாளியாயிருந்து, எகிப்தில் அடுத்த பார்வோனான இருந்திருப்பான் என்பதை நாம் கண்டறிகிறோம். எனவே அவன் சுற்றும் முற்றும் பார்த்தபோது, அவன் குறிப்பிட்ட வயதினையடைந்து பொறுப்புடைமையை உடையவனானப் பிறகு, அந்த அடிமைகள் சேற்றுக் குழியில் வேலைசெய்வதை கவனித்திருப்பான். மோசே, அரண்மனை ஜன்னல்களினூடாக நோக்கிப் பார்த்தபோது, அதே அடிமைகளை பார்வோனும் நோக்கிப் பார்த்தான், ஆனால் அந்தப் பார்வையில் என்னே ஒரு வித்தியாசமிருந்தது 47 இந்தக் காலையில் சில நிமிடங்கள் அந்த அபிப்பிராய சிந்தனையின் பேரில் பேச விரும்புகிறேன். பரலோகத்தின் தேவன் தாமே அதை இங்குள்ள ஒவ்வொரு இருதயத்திலும் பதியச் செய்வாராக. அது நீங்கள் எந்தக் காரியத்தையும் எப்படி நோக்கிப் பார்க்கிறீர்கள் என்றும், அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது என்பதுமாயுள்ளது. 48 அநேக ஆண்டுகளுக்கு முன்னர் ஓல்டு குளோரி பாரன் என்ற இடத்தில் சகோதரன் பாஸ்வர்த் அவர்களுடைய ஊழியத்தில் மனமாற்றமடைந்திருந்த ஒருவரை, ஜான் ஸ்பாரால் என்ற மகத்தான சுவிசேஷகரை உங்களில் அநேகருக்கு நினைவிருக்கும். அவருடைய அன்புக்குரிய துணைவியான மனைவி மரிப்பதற்கு முன்பு ஒரு நாள் அவர் ஒரு பயணம் மேற்கொண்டதாகக் கூறினார். அப்பொழுது அவர்கள் பிரான்ஸில் உள்ள லோரைன் என்ற இடத்தில் உள்ள லா சாலி என்ற இடத்தில் இருந்தனர். அதே இடத்திற்கு விஜயம் செய்யும் சிலாக்கியம் எனக்கு உண்டாயிருந்தது. அப்பொழுது வழிகாட்டியோ அவர்களை தோட்டங்களினூடாக அழைத்துக் கொண்டு சென்று, வித்தியாசமான காரியங்களை அவர்களுக்கு காட்டிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டுள்ளது போன்ற ஒரு குறிப்பிட்ட சிலையினண்டை வந்தனர். அப்பொழுது திரு.ஸ்பாரால் அவர்கள் தூரத்தில் நின்று அதை நோக்கிப் பார்த்து விட்டு, அவரும், அவருடைய மனைவியும் தங்களுடைய இருதயங்களில் அந்த ஓவியன் இல்லை சரியாகக் கூறினால் அந்த சிற்பி தன்னுடைய சிந்தையில் என்னத்தைத் தான் கொண்டிருந்திருப்பான் என்றும், அவன் ஒரு கல்லிலிருந்து வெட்டியெடுக்கும்போது, கர்த்தராகிய இயேசுவின் வேதனையையும், அன்பையும் இரக்கத்தையும் சுட்டிக்காட்டும்படியான காரியமோ இப்படி ஒரு கோரமாக காணப்படுகிறதே, இது முழுவதுமே எவ்வளவு கரடுமுரடாகவும் வெட்டப்பட்டது போன்றும் காட்சியளிக்கிறதே என்றும் விமர்சித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது வழிகாட்டியானவர் திரு.ஸ்பாரால் அவர்களிடத்தில் வந்து, “ஐயா, நீங்கள் இந்த கர்த்தராகிய இயேசுவின் சிலையைக் குறித்து விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார். அதற்கு இவரோ, “ஆம், நான் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்றார். 49 அப்பொழுது அவர், “நான் அதற்காக ஒரு இம்மியும் ஆச்சரியப்படவில்லை, ஏனென்றால் அநேக ஜனங்கள் அதை முதல் முறை பார்க்கும்போது, அவர்கள் அதை விமர்சிக்கத்தான் செய்கிறார்கள்” என்றார். 50 அதற்கு திரு.ஸ்பாரல் அவர்கள், “காரணம், என்னால் எந்த இரக்கத்தையோ அல்லது அப்பேர்ப்பட்ட ஒரு காரியத்தைக் காண்பதிலிருந்து உண்டாகும் எந்த அகத்தூண்டுதலையுமே காணமுடியவில்லையே, எனவே நான் இந்த சிற்பி ஏன் அதை இந்தவிதமாய் உருவாக்கிவிட்டான் என்றே வியப்புற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். 51 “சிற்பியோ…” அப்பொழுது வழிகாட்டியோ, “திரு.ஸ்பாரால் அவர்களே, இந்த சிலை சரியாகத்தான் உள்ளது, சிற்பியும் தன்னுடைய சிந்தையில் சரியான காரியத்தையேக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் தொல்லை எங்குள்ளதென்றால் உங்களிடத்தில் தான். அதையோ நீர் இந்தவிதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்” என்று கூறினார். அதன்பின்னர் அவர் அவரையும், அவருடைய மனைவியையும் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு, கூறப்பட்டதான இந்த சிலுவையின் பாதத்தண்டையுள்ள ஒரு பீடத்தண்டை முழங்காற்படியிடும்படி வழி நடத்தினார். அதன்பின்னர் அவர், “இப்பொழுது, திரு.ஸ்பாரல் அவர்களே, இப்பொழுது மேல் நோக்கிப் பாரும்” என்றாராம். அப்பொழுது அவர் மேல் நோக்கிப் பாரும் என்றாராம். அப்பொழுது அவர் மேல் நோக்கிப் பார்த்தபோது, அவருடைய இருதயமே நின்றுவிட்டது போன்று அவருக்கிருந்ததாக அவர் கூறினாராம். அங்கே தூரமாக நின்று அதை இந்தவிதமாகப் பார்ப்பதற்கும், அது பார்க்கும்படி உண்டாக்கப்பட்ட விதத்தில் அதை முழங்காற்படியிட்டு நோக்கிப் பார்ப்பதற்கும் அது என்னே ஒரு வித்தியாசமாய் இருந்தது. 52 அந்தவிதமாகத்தான் தேவன் இருக்கிறார். அந்தவிதமாகவே விசுவாசம் இருக்கிறது. அதுவே அதை நீங்கள் நோக்கிப் பார்க்கிறவிதமாய் உள்ளது. நீங்கள் ஏதோ ஒருவிதமான ஒரு சரித்திரப்பிரகாரமான வேதாகமத்தை நோக்கிப் பார்ப்பீர்களேயானால், கடந்த காலங்களில் இருந்த ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து நோக்கிப் பார்ப்பீர்களேயானால், நீங்கள் ஒருபோதும் வேதாகமத்தின் உண்மையான மதிப்பைப் புரிந்துக்கொள்ளவேமாட்டீர்கள். நீங்கள் உங்களுடைய முழங்காலில் நின்று, இந்த வேதாகமத்தின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து, அதை பரிசுத்த ஆவியானவரின் கண்களினூடாக நோக்கிப் பார்க்க வேண்டும். 53 நான் இந்தக் காலையில் இந்தக் கூட்டத்தாரை கேட்கவுள்ளேன். அவர் மாறாத தேவனாயில்லையென்றால், ஒரு சரித்திரப்பிரகாரமான தேவனாய் இன்றைக்கு என்ன நன்மையைச் செய்வார்? மோசேயை எடுத்து, அவனோடிருந்து அற்புதங்களைச் செய்த தேவன் என்ன நன்மையைச் செய்கிறார்? இன்றைக்கு அவர் மாறாத தேவனாயிருக்கவில்லையென்றால், அப்படிப்பட்ட ஒரு தேவனைக் குறித்து வாசிப்பது நமக்கு என்ன நன்மையைச் செய்யும்? அக்கினிச் சூளையிலிருந்து எபிரெயப் பிள்ளைகளை விடுவிக்க முடிந்த தேவன் இன்றைக்கு அதே மாறாத தேவனாயிருக்கவில்லையென்றால் அந்த தேவனால் என்ன பயன்? கடந்த காலத்தில் சரியானதற்கும் தவறானதற்குமிடையே நியாயத்தீர்த்து, தவறானதை தண்டித்து, சரியானதை ஆசீர்வதித்த தேவன் இன்றைக்கும் மாறாத தேவனாயிருக்கவில்லையென்றால் அந்த தேவனால் என்ன பயன்? நாம் சபைக்கு எதற்காகச் செல்கிறோம்? அவர் அதே நியாய்த்தீர்ப்பின் தேவனாயிருக்கவில்லையென்றால், அவர் எப்பொழுதும் ஒரே அபிப்பிராயத்தை கொண்டுள்ள தேவனாயிருக்கவில்லையென்றால், நாம் ஏன் உலகத்தின் காரியங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்? கடுமையான ஜூரத்தோடிருந்த ஒரு ஸ்திரீயினுடைய கரத்தை தொட்டு, அந்த ஜூரத்தை நிறுத்தின தேவன் இன்றைக்கும் மாறாத அதே தேவனாயிருக்கவில்லையென்றால் அதனால் என்ன நன்மை உண்டாகும்? மரித்து நான்கு நாட்களான தன்னுடைய சிநேகிதனை ஒரு கல்லறையிலிருந்து உயிரோடெழும்பும்படி அழைக்க முடிந்த தேவன் இன்றைக்கும் மாறாத அதே தேவனாயிருக்கவில்லையென்றால், அந்த தேவனைச் சேவிப்பது என்ன பயனை உண்டாகும்? 54 நாம் மீண்டும் ஒரு கரண்டியளவு சாம்பலாயிருந்தாலும், என்றோ ஒரு மகிமையின் நாளில் அவர் நம்மை பூமியிலிருந்து அழைப்பார் என்று நாம் விசுவாசத்தினால் விசுவாசிக்கிறோம். நாம் அதை எப்படி நிரூபிக்கிறோம்? நாம் அதை நிரூபிக்கிறதில்லை. நாம் அதை விசுவாசிக்கிறோம். நாம் எந்தக் காரியத்தையும் நிரூபிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படவில்லை. நாம் அதை விசுவாசிக்கும்படிக்கே கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறோம். 55 விசுவாசத்தினாலே மோசே இன்ன—இன்னதைச் செய்தான். மோசே, ஒரு வாலிப மனிதனாக அரண்மனை ஜன்னலினூடாக அடிமைகளை நோக்கிப் பார்த்தபோது, பார்வோன் கண்ட அடிமைகளான அழுக்கான, அசுத்தமான, சேற்றை மிதித்துக்கொண்டிருந்த அதேக் கூட்டத்தாரையேக் கண்டான். 56 பார்வோன் அவர்களை நோக்கிப் பார்த்தபோது, எகிப்தியர்கள், அவர்கள் ஒரு கூட்ட அடிமைகளாயில்லாமல் வேறொன்றுமாயிருக்கவில்லை. அவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருந்தனர்; பார்வோன் கட்டிக் கொண்டிருந்த பட்டணங்களுக்கு நன்மையாக சேற்றில் செங்கல்களை உண்டுபண்ண மண் பிசைகிற மானிடர்களாயிருக்க வேண்டியிருந்தனர். அந்தவிதமாகவே எகிப்தியர்களை, பார்வோன் அந்த அடிமைகளை நோக்கிப் பார்த்தான். 57 ஆனால் மோசே, அவன் அவர்களை நோக்கிப் பார்த்தபோது, அது மோசே கொண்டிருந்த ஒரு வித்தியாசமான பார்வையாயிருந்தது. அவர்கள் சென்று கொண்டிருப்பதை மோசே ஜன்னலினூடாக பார்த்தபோது, அவர்களுடைய முகத்தில் சேற்று நீர் வடிவதையும், அவர்களுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்டோடுவதையும், அவர்களுடைய சரீரங்கள் வளைந்துபோயிருப்பதையும் கண்டான். ஆனால் அவன் அவர்களை தேவனுடைய ஜனங்களாகக் கண்டான். அவன் அவர்களை அடிமைகளாக நோக்கிப் பார்க்கவில்லை. அவன் அவர்களை தெரிந்துகொள்ளப்பட்ட தேவனுடைய ஜனங்களாகக் கண்டான். 58 ஓ, நான் நாட்டைவிட்டு நாட்டிற்கு, ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கு சென்று பிரசங்கிக்கிறேனே! நான் அன்பைத் தவிர வேறெந்த பிரமாணமுமல்லாமல், வேதாகமத்தைத் தவிர வேறெந்த புத்தகமுமில்லாமல், கிறிஸ்துவைத்தவிர வேறெந்த கோட்பாடுமில்லாத ஸ்தாபனமற்ற நிறுவனமான இந்த சிறு கூடாரத்தின் வாசல்களை விட்டுப் புறப்பட்டது முதற்கொண்டு, நான் தேவனுடைய பிள்ளைகளை, புறக்கணிக்கப்பட்ட, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாகவே காண முயற்சித்துள்ளேன். அவர்கள் பிரான்ஹாம் கூடாரத்தை சேர்ந்தவர்களா என்று நான் கேட்கிறதில்லை. அவர்கள் மெத்தோடிஸ்டுகளா, அல்லது அவர்கள் பிரஸ்பிடேரியன்களா அல்லது அவர்கள் பெந்தேகோஸ்தேக்களா அல்லது நசரேயன்களாக அல்லது யாத்திரீக பரிசுத்தர்களா என்று நான் அவர்களை கேட்கிறதில்லை. நான் அவர்களை தேவனுடைய ஜனங்களாகவே நோக்கிப் பார்க்க விரும்புகிறேன். அவர்களுடைய செய்கைகளையும், அவர்களுடைய கிரியையையும் காண்கிறேன், அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய ஊழியக்காரர்களாயிருக்கிறார்கள். என்னுடைய இருதயம் அவர்களோடு ஐக்கியங்கொள்ள வாஞ்சிக்கிறது, அவர்கள் எந்த ஸ்தாபனப் பிரிவினராய் இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. நான் அவர்களுடைய ஐக்கியத்தை வாஞ்சிக்கிறேன். அவர்கள் தேவனுடைய ஜனங்கள் என்று நான் அறிந்திருக்கிறபடியால் நான் அவர்களை நேசிக்கிறேன். 59 நான் ஒரு ஸ்திரீ வீதியில் ஒரு நீண்ட பாவடையோடும், அவளுடைய தலைமுடியை அழகாக பின்பக்கம் வாரிவிட்டுக்கொண்டு, பார்ப்பதற்கு கண்ணியமான உடை உடுத்தி வருவதைக் காணும்போது, அதே சமயத்தில் நான் மற்றொரு வாலிபப் பெண்மணி, ஒருகால் அதே வயதுடையவள், குட்டைக்கால் சட்டைகளை அணிந்து வருவதையும் காணும்போது, இவள் உலகத்தின் பார்வைக்கு நீண்ட கூந்தலையுடைய ஸ்திரீயைப் பார்க்கிலும் இரட்டிப்பான அழுகுள்ளவளாகக் காணப்பட்டாலும், நான் ஒரு கிறிஸ்தவளைப் போன்று உடை உடுத்தியிருந்த அந்த பெண்ணின் பட்சமே சார்ந்திருப்பேன். அவர்கள் அவளை நகைத்து, அவளை ஒரு மதவெறியர் என்று அழைத்தாலும், நான் இன்னமும் அவள் பட்சமாகவே சார்ந்திருப்பேன். அவள் மற்றப் பெண்ணைப்போல தனிச் சிறப்பு வாய்ந்த அழகுள்ளவளாயில்லாமலிருக்கலாம், ஆனால் அவள் ஏதோ ஒன்றைக் காண்கிறாள். அவள் காண முடியாதவரை விசுவாசத்தினாலே காண்கிறாள், அவர் அவளுடைய ஜீவியத்தை வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறார். 60 நான் “உதவிக்காரர்” அல்லது “பிரசங்கியார்” அல்லது “ஒரு மதவெறியர்” என்று அழைக்கப்படுகிற ஒரு மனிதன் பணியில் இருப்பதைக் காணும்போது, அவர் புகைப்பிடிப்பதற்கு, மதுபானம் அருந்த, நடனங்களுக்குச் செல்ல, மற்றவர்களைப் போலிருக்க மறுக்கிற காரணத்தால், அவன், “ஒரு மதவெறியர்” என்று அழைக்கப்பட்டாலும், என் இருதயமோ அவர் பக்கமாகவே செல்லும். அவர் என்னுடைய சகோதரனாயிருக்கிறார், இந்த எகிப்திய மண்ணில் உள்ள அவரை கட்டித் தழுவி, “சகோதரனே, நாம் இந்த தேசத்தில் பரதேசிகளும் அந்நியர்களுமாயிருக்கிறோம், நான் உங்களோடு ஐக்கியங்கொள்ள விரும்புகிறேன்” என்று கூற நம்முடைய இருதயம் வாஞ்சிக்கிறதே! மோசே ஒரு தெரிந்து கொள்ளுதலை, விசுவாசத்தினால் தெரிந்து கொள்ளுதலைச் செய்ய வேண்டியதாயிருந்தது. 61 எத்தனையோ வாலிபர் பார்வோனுடைய குமாரத்தியின் மகனாவதற்கான வாய்ப்பிற்காக குதித்திருந்திருப்பார்களே! எத்தனையோ வாலிபர்கள் மோசேயிக்கிருந்த வாய்ப்பிற்காகவும், எல்லா இன்பங்களையும், உலகத்தின் வசீகரிக்கும் அழகை அனுபவித்து மகிழவும், முழு உலகத்தையே தன்னுடைய பாதத்தண்டையில் கொண்டிருக்கும்படியான எகிப்தின் இராஜவாகும்படி குதித்திருந்திருப்பார்களே! “மோசே அல்லற்பட்டு அவதியுறுகின்ற தேவனுடைய ஜனங்களோடு தன்னுடைய ஸ்தானத்தை தெரிந்துகொண்டபோது” அவனுடைய நாளிலிருந்த வாலிபர்கள், “என்னே ஒரு முட்டாள்தனமானக் காரியம்” என்று எண்ணியிருக்க வேண்டும். 62 அவன் ஏன் அதைச் செய்தான்? விசுவாசத்தினாலே அவன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவன் இந்த உலக வசீகரிக்கும் அழகிற்கு அப்பால் நோக்கிப் பார்த்தான். அவன் பாவத்தின் இன்பங்களுக்கு அப்பால் நோக்கிப் பார்த்தான். அவன் விசுவாசத்தினாலே அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, என்ன சம்பவித்தாலும் பொருட்படுத்தமால் தேவனை சேவிக்கும்படியான ஒரு தெரிந்துகொள்ளுதலைச் செய்தான் என்று வேதம் கூறியுள்ளது. 63 அது மாறியிருக்கவில்லை. ஒரு நல்ல கட்டிடம் என்று நாம் அழைக்கும் இடத்திற்கு நம்மில் அநேகர் செல்லக் கூடும். ஒரு நல்ல சபை இருக்கையில் அமரும் இன்பங்களையும், ஐக்கியத்தையும் நாம் அனுபவித்து மகிழலாம். நாம் குடிப்பதலிலும், புகைப் பிடிப்பதலிலும், உடை உடுத்துவதிலும், உலகத்தாரைப் போல் நடந்து கொள்வதிலும் மிகவும் புகழ்வாய்ந்தவராயிருக்கலாம். ஆனால் காரியம் என்ன? நீங்கள் உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள், அப்பொழுது விசுவாசத்தினாலே நீங்கள் அதரிசனமானவராயிருக்கிற அவரைக் கண்டு, புறக்கணிக்கப்பட்ட மற்றும் இந்த நாளின் பரிசுத்த உருளையர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களோடு உங்களுடைய தீர்மானத்தை எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பாருங்கள். விசுவாசத்தினாலே நாம் அதரிசனமானவராயிருக்கிறவரைக் கண்டு துன்புறுத்தல்களையும், இன்னல்களையும் அனுபவிப்பதையே தெரிந்து கொள்வோம். 64 ஜனங்கள் துன்பப்படுத்தப்பட வேண்டியதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் அவர்களுக்குக் கூறமாட்டேன். அவர்கள் துன்பப்படுவதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. அது செய்யும்படியான மானிட காரியமாயிருக்காது. ஆனால் துன்பப்படுதல் கடமையின் பாதையில் இருந்தால், அப்பொழுது அது உண்டாகும்போது, நாம் அதை ஏற்றுக்கொள்வோமாக. யாரோ ஒருவர் உங்களைக் குறித்து பரியாசம் செய்யும்படியான ஒரு காரியத்தை நீங்கள் செய்யும்படி நான் விரும்புகிறதில்லை. “நான் ஒரு…நான் உலகத்தில் இன்ன—இன்ன காரியத்தை விசுவாசிக்காத ஒரு சபையை சேர்ந்தவன்” என்ற அது போன்ற காரியங்களை, அதாவது ஜனங்கள் உங்களைக் குறித்து பரியாசம் பண்ணும்படியான வித்தியாசமான காரியங்களை நான் உங்களுக்குக் கூற விரும்பமாட்டேன். நீங்களே அதை உங்கள் மீது வருவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து வெளியே போய், தொடர்ந்து தீவிரமாயிருந்து வந்த ஏதோ ஒன்றை செய்யுங்கள் என்று நான் கூறமாட்டேன். யாரோ ஒருவர் நீங்கள் ஒரு மதவெறியர் என்று கூறும்படியாக நீங்கள் அதை செய்ய நான் விரும்பமாட்டேன். நீங்களே அதை உங்கள் மீது வரவழைத்துக்கொள்கிறீர்கள். ஆனால் அது தேவனை நோக்கிய உங்களுடைய கடமையின் பாதையில் இருந்தால், உலகம் கூற விரும்புகிறதை அவர்கள் கூறட்டும். நீங்கள் தொடர்ந்து ஜீவியுங்கள். நீங்கள் ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்கிறீர்கள். ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும் இதைச் செய்தாக வேண்டும். 65 மோசே கண்டதை பார்வோன் கண்டிருக்க முடிந்திருந்தால் என்னவாயிருந்திருக்கும்? அவன் ஜனங்களின் வேதனைகளைக் கண்டான். அதற்கு என்னக் கிரயம் செலுத்தப்பட்ட வேண்டியிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் விசுவாசத்தினாலே பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் அவன் அதைத் தெரிந்து கொண்டான். 66 இங்கே சிறிய, வாலிப பெண்மணிகள் கவர்ச்சிகரமான வாலிப ஸ்திரீகளாக அமர்ந்திருக்கலாம். உலகமானது உங்களிடத்தில், “இப்படி—இப்படி செய்யுங்கள். நீங்கள் அழகாயிருக்கிறீர்கள். உங்களுடைய சரீரம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதைக் காண்பிக்க வேண்டும்” என்று கூற விரும்பும். 67 ஆனால் என் சகோதரியே, “ஒரு புருஷனின் உடையை ஒரு ஸ்திரீ தரிப்பது அருவருப்பானது” என்று கூறின அப்பால் உள்ள அவரை நோக்கியே உன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார். 68 உங்களுடைய சமுதாயத்தில் உள்ள புருஷர்கள், உங்களோடு சகவாசம் செய்யும் ஸ்திரீகள், “நீளமான முடியை வெட்டிக்கொள்ளுங்கள். அது குளிர்ச்சியாயிருக்கும். அது இது, அது அல்லது மற்றதாயிருக்கும்” என்றால், அல்லது “அது உங்களை சிறந்தாக்கிவிடும்” என்று கூறியிருந்தால், நீங்கள் அதற்கு செவிகொடுக்காதீர்கள். 69 நீங்கள் விசுவாசத்தினாலே உங்கள் கண்களை ஏறெடுத்து, “ஸ்திரீயினுடைய தலைமுடியோ அவளுடைய மகிமையாயிருக்கிறது, அவள் அதை வெட்டக் கூடாது” என்று கூறின அவரையேப் பாருங்கள். 70 அவர்கள், “அது புகழ்வாய்ந்ததாயிருக்கும். நீங்கள் உங்களுடைய பணியில் சிறந்து விளங்குவீர்கள் அல்லது நீங்கள் நட்புக்காக சற்று மதுவை அருந்தினால், உங்களுடைய எஜமானிடத்தில் சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் மற்ற ஸ்திரீகளைப் போல சிகரெட்டுகளைப் புகைத்தால், நீங்கள் உங்களுடைய சுற்றுப் புறத்தாரிடம் இன்னும் அதிக நட்புடையவர்களாக விளங்குவீர்கள்” என்று கூறினால், 71 விசுவாசத்தினால் உங்களுடைய கண்களை ஏறெடுத்து, “இந்த சரீரத்தை தீட்டுப்படுத்தினால் நான் அதை அழித்துப் போடுவேன்” என்று கூறினவரையே நோக்கிப் பாருங்கள். விசுவாசத்தினால் நாம் அந்தக் காரியங்களை விசுவாசிக்கிறோம். அது நீங்கள் கண்டுள்ள எந்தக் காரியமுமாயிருக்கவில்லை. அது நீங்கள் விசுவாசிக்கிற ஒரு காரியமாய் உள்ளது. விசுவாசத்தினாலே மோசே அதைச் செய்தான். 72 இந்த விசுவாசத்தில் நடக்கும்போது, ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்ய வேண்டிய ஒரு நேரம் உண்டாகிறது. 73 நாம் செய்கிற மோசமான தவறையே லோத்து செய்து விட்டான். ஏராளமான சமயங்களில் நாம் நம்முடைய சொந்த நன்மைக்காகவே தெரிந்து கொள்கிறோம். நாம் சிறந்ததாயிருக்கிற காரியங்களை தெரிந்து கொள்கிறோம். 74 சில நேரத்தில் சபையில் ஒரு சிறு வீண் சண்டை உண்டானால், அப்போது யாரோ ஒருவர், “பாருங்கள், உதவிக்காரர் அல்லது மேய்ப்பர் இந்தப் பக்கத்தில் இருக்கிறார்” என்று கூறுவார். அதை நோக்கிப் பார்க்காதீர்கள். நீதி எது என்பதையே நோக்கிப் பாருங்கள். அந்தக் காரியத்தை வெளியேற்றிவிட்டு அவர்கள் இருவரையும் ஒன்று சேருங்கள். அதுவே தேவபக்தியாயுள்ளது. 75 ஒரு தெரிந்து கொள்ளுதல் உண்டு. நாம் நமக்காகவே தெரிந்து கொள்கிறோம். நாம் நம்முடைய சொந்த நன்மைக்காகவே ஏதோ ஒரு காரியத்தை தெரிந்து கொள்கிறோம். 76 ஆனால் மோசே தேவனுடைய ஜனங்களோடு நடக்கும்படியாக துன்பங்களையும், அவமானத்தையும் தெரிந்து கொண்டான். அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். இதற்கு செவி கொடுங்கள். “தேவனுடைய ஜனங்களின் துன்பங்களைத் தெரிந்து கொண்டு, அதை மகத்தான பொக்கிஷமாக எண்ணினான். ஏனென்றால் அவன் அதரிசனமானவரைத் தரிசித்து உறுதியாயிருந்தான்.” இப்பொழுது, லோத்து ஒரு முறை ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்ய வேண்டியதாயிருந்தது. 77 இந்தக் காலையில் இங்கு அமர்ந்துள்ள புருஷர்களும் ஸ்திரீகளும் உங்களுடைய இறுதியான தெரிந்து கொள்ளுதலைச் செய்யலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் இப்பொழுது என்னவாயிருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்த காரணத்தால், நீங்கள் இன்றைக்கு என்னவாயிருக்க வேண்டுமோ அவ்வாறிருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது தெரிந்து கொள்வதோ, இன்றைய தினத்திலிருந்து இன்னும் ஐந்து ஆண்டுகளில் என்னவாயிருப்பீர்கள் என்பதை தீர்மானிப்பதாயுள்ளது. இன்றைய தினத்திலிருந்து இன்னும் ஐந்து வருடங்களில் நீங்கள் ஒரு மிஷனரியாக இருக்கலாம். இன்றைய தினத்திலிருந்து இன்னும் ஐந்து வருடங்களில் நீங்கள் ஒரு புகழ்வாய்ந்த கிறிஸ்தவராயிருக்கலாம். 78 இல்லையென்றால் நீங்கள் தவறான தீர்மானம் செய்த காரணத்தால், இன்றைய தினத்திலிருந்து இன்னும் ஐந்து வருடங்களில் நீங்கள் நரகத்தில் இருக்கலாம். இன்றைய தினத்திலிருந்து இன்னும் ஐந்து வருடங்களில் ஒரு மதுபானம் அருந்தும் இடத்தில் உள்ள எச்சிற்படிகங்களை நீங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கலாம். இன்றைய தினத்திலிருந்து இன்னும் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் வீதியில் ஒரு விபச்சாரியாக இருக்கலாம். 79 இல்லையென்றால் கிறிஸ்துவுக்கான உங்களுடைய தெரிந்து கொள்ளுதலின் நிமித்தமாக நீங்கள் எந்த சமுதாயத்திலாவது ஒரு புகழ்வாய்ந்த ஒரு புருஷனாகவோ அல்லது ஒரு ஸ்திரீயாகவோ இருக்கலாம். நீங்கள் இன்றைக்கு செய்துள்ள உங்களுடைய தெரிந்து கொள்ளுதலின் நிமித்தமாக இன்றைய தினத்திலிருந்து இன்னும் ஐந்து வருடங்களில் நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்று மகிமையில் இருக்கலாம். 80 ஆனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் காண்கிறதை நோக்கிப் பார்க்காதீர்கள். நீங்கள் விசுவாசித்தினால் காண்கிறதை தெரிந்து கொள்ளுங்கள். விசுவாசத்தினால் நீங்கள் தெரிந்து கொள்ளுகிற காரியம் மாத்திரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாய் உள்ளது. 81 லோத்து, அவன் ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆபிரகாம் லோத்திற்கு அவனுடைய தெரிந்து கொள்ளுதலை அளித்தான். 82 தேவன் உங்களுக்கு உங்களுடைய தெரிந்து கொள்ளுதலை அளிக்கிறார். “நீங்கள் யாரை சேவிப்பீர்கள் என்பதை இந்த நாளில் தெரிந்து கொள்ளுங்கள்.” ஏதேன் தோட்டத்தில் ஒரு அறிவின் விருட்சமும், ஒரு ஜீவவிருட்சமும் இருந்தது. மனிதன் தான் விரும்பின ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சிலாக்கியம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வண்ணமாகவே அது இன்றைக்கும் உள்ளது. நீங்கள் விரும்புகிற எதையும் தேர்ந்தெடுக்கும் சுயாதீனம் உங்களுக்கு சிலாக்கியமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 83 உங்களைச் சுற்றியுள்ள நவீன காரியங்களையும், புகழையும், உங்களைக் கவரக் கூடிய கவர்ச்சியையும் நோக்கிப் பார்க்காதீர்கள் என்பதே என்னுடைய அறிவுரையாய் உள்ளது. ஆனால் தெரிந்து கொள்ளுதல் சரியாகக் கூறினால் விசுவாசத்தினாலே என்றோ ஒரு நாள் வாக்குத்தத்தத்தை அளிக்கிறவர் வந்து எல்லா தவறுகளையும் சரியாக்கி உங்களுக்கு நித்திய ஜீவனை அளித்து உங்களை எழுப்பப் போகிறவரையே தெரிந்து கொள்ளுங்கள். நிந்திக்கப்பட்ட வழியில் உள்ள கர்த்தருடைய சிலரோடு நீங்கள் தெரிந்து கொள்வதாயிருந்தால் கவலையேப்படாமல், அந்தத் தெரிந்துகொள்ளுதலையேச் செய்யுங்கள். தொல்லைகள் எதிர்நோக்கி இருந்தாலும், தேசத்தில் தொல்லைகளிலிருந்தாலும், சபையில் தொல்லைகள் இருந்தாலும், வீட்டில் தொல்லைகள் இருந்தாலும், அது எங்கேயிருந்தாலும் கவலைப்படாமல், “விசுவாசத்தினாலே, நான் தேவனை சேவிப்பேன். நான் அவருடைய பிரசன்னத்தில் என்னுடைய இருதயத்தில் தாழ்மையாயிருப்பேன். நான் தேவனுடைய பிள்ளைகளுடைய வழியையே தெரிந்து கொள்வேன். நான் அவர்கள் நிந்திக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, விரட்டப்பட்டு, பரியாசம் பண்ணப்பட்டதைக் காண்கிறேன், ஆனாலும் நான் இன்னமும் என்னுடைய கடமையின் பாதையையேத் தெரிந்து கொள்வேன். நான் அதனோடு தரித்திருப்பேன். அவர்கள் அழும்போது, நான் அவர்களோடு அழுவேன். துக்கம் உண்டாகும்போது, நான் அவர்களோடு துக்கப்படுவேன். அவர்கள் ஜீவிக்கிறவிதமாக நானும் ஜிவிப்பேன்” என்றே உங்களுடைய தெரிந்து கொள்ளுதலைச் செய்யுங்கள். 84 நகோமி கூறியது போல…இல்லை ரூத் நகோமியினிடத்தில், “உன்னுடைய வழிகளே என்னுடைய வழிகளாயிருப்பதாக. என்னுடைய வழிகள் உங்களுடைய வழிகளாயிருப்பதாக. நீ எங்கே ஜீவிப்பாயோ, அங்கு நான் ஜீவிப்பேன். நீ எங்கே போகிறாயோ, நானும் அங்கு செல்வேன். நீ சேவிக்கிற தேவனே என்னுடைய தேவனாயிருப்பார்” என்று கூறியது போலவேயாம். அது உங்களுடைய மனசாட்சியையே அழிக்க நேரிட்டாலும், நீங்கள் யாரோ ஒருவர் என்று எண்ணக்கொள்ளச் செய்தாலும் அந்தத் தெரிந்து கொள்ளுதலைச் செய்யுங்கள். உங்களையே கட்டுப்படுத்திக் கொண்டு, கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடன் உங்களுடைய வழியை தெரிந்துக்கொண்டு, ஊழியக் களத்தின் சேவையிலும், கடமையின் பாதையிலும் உண்மையாய்த் தரித்திருங்கள். 85 லோத்து சுற்றி நோக்கிப் பார்த்தான். அப்பொழுது அவன், “நான் ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்துவிட்டேன்” என்றான். அவன் சோதோமை நோக்கிப் பார்த்தான். ஆபிரகாம் இருந்த இடத்தில், அவன் கண்டதைவிட நல்ல சிறந்த பசுமையான புல்வெளி வயல்களை லோத்து கண்டான். அவன் தன்னுடைய ஆடுமாடுகளை மேய்த்து, அவைகளை கொழுமையானவைகளாகவும் நல்ல சிறந்த கால்நடைகளாக வைத்திருக்கும்படியான வாய்ப்புகளையேப் பார்த்தான். 86 நான் எவருடைய உணர்வுகளையும் புண்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் அநேகப் பிரசங்கிமார்கள் சுவிசேஷத்தோடு ஒப்புரவாகி, அதிலிருந்து அதிகப் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களுடைய நிலைமையாயிருந்து வருகிறது. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை மூன்று முறைகள் தட்டுகிறார்—ஆசி.] ஒரு ஆகார சீட்டிற்காகவே! நான் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையில் உள்ள என்னுடைய விசுவாசத்தின் உறுதியை விட்டுக் கொடுத்து ஒப்புரவாவதைக் காட்டிலும் வறண்ட நிலத்தில் வாழ்ந்து, புசித்து, ஓடையிலிருந்து வரும் நீரைப் பருகி மலிவான விலைக்கொண்ட சிறு திண்பண்டங்களை புசித்து வாழ்வதையே விரும்புவேன். நான் அந்தவிதமாகவே என்னுடைய வழியைத் தெரிந்து கொள்வேன். 87 அவர்களில் அநேகர், “பில்லி, உம்முடைய கூட்டத்தோடு உள்ள காரியம் என்ன? அதில் அநேக பெந்தேகோஸ்துகள் கூட இருக்கின்றனரே” என்று கேட்டனர். ஒரு பெரிய ஸ்தாபன ஊழியக்காரர் அதைக் கூறினார். அதற்கு நான், “உங்களுடைய ஸ்தாபனம் என்னுடைய கூட்டத்திற்கு ஆதரவளிக்குமா?” என்று கேட்டேன். 88 அண்மையில் லுக் என்ற பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளிவந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த எழுத்தாளர் பெந்தேகோஸ்தே ஜனங்களைப் பற்றி பேசியிருந்ததை அங்கே கூறியிருந்தார். அவர், “பெந்தேகோஸ்தே சபையானது இன்றைய உலகில் மிகவும் வேகமாக வளருகின்ற சபையாய் உள்ளது” என்று கூறினார். ஏன்? காரணம் புருஷர்களும் ஸ்திரீகளும் தங்களுடைய கண்களை தொலை நோக்குடன் ஏறெடுத்துப் பார்த்துள்ளனர். 89 அந்த எழுத்தாளரும் கூட பெந்தேகோஸ்தே ஜனங்களைப் பாராட்டினார். ஓ, உண்மையாகவே அவர், “அவர்களில் சிலர் தீவிரமாக புறப்பட்டுவிட்டனர். ஆனால் மெத்தோடிஸ்டுகள் ஒரு கோட்பாட்டை ஆராதிக்கின்றனர். அவர்கள் ஒரு கோட்பாட்டின் மூலமே தேவனை ஆராதிக்கிறார்கள். பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும் அதையே செய்கின்றனர். ஆனால் பெந்தேகோஸ்தேக்களோ தங்களுடைய வேதாகமத்தின் மூலம் ஆராதிக்கின்றனர்” என்று கூறியிருந்தார். 90 விசுவாசத்தினாலே நாம் வாக்குத்தத்தைக் காண்கிறோம். அவர்கள் எவ்வளவுதான் நிந்திக்கப்பட்டாலும் கவலைப்படாமல் நான் என்னுடைய பங்கை அவர்களோடே தெரிந்து கொள்வேன், நான் இன்னமும் அவர்களில் ஒருவனாயிருக்கிறேன். இஸ்ரவேலருக்கு செய்ததுபோல, அதாவது இவர்கள் கொண்டிருந்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு இவர்களை பரியாசம் செய்திருந்தாலும், தேவன் ஆசீர்வதித்திருந்தவர்களை சபிக்க முயற்சித்து குன்றின் மேல் நின்ற அந்த கள்ளத் தீர்க்கதரிசியான பிலேயாமோடு நான் ஒரு போதும் நிற்க விரும்பமாட்டேன். காரணம் அந்தப் பாளையத்தில் ஒரு அடிக்கப்பட்ட கன்மலையும், ஒரு இரத்தம் தோய்ந்த பலியும், ஒரு அக்கினி ஸ்தபமும் இருந்தது. அவர்கள் என்ன நிலைமையில் இருந்தாலும் பொருட்படுத்தாமல், அது அவர்களை ஜெயத்திற்கு வழி நடத்திக்கொண்டிருந்தது. அவர்கள் அதண்டையில் வர வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவர்கள் விசுவாசத்தினால் நடந்துகொண்டிருந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜனங்களாய் இருந்தனர். அவர்கள் ஒரு ஸ்தாபனமாயில்லாமல், அவர்கள் சுற்றி அலைந்து திரிபவர்களாயிருந்தாலும், அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கின்றனர். ஆனால் நான் அவர்களோடு என்னுடைய வழியைத் தெரிந்து கொண்டு, அவர்களோடு அவர்களுடைய நிலைமைகளோடு சேர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்; அவர்களுடைய ஸ்தாபனத்தோடல்லாமல், விசுவாசத்தினால் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுள்ளேன் என்ற தேவனுடைய நித்திய ஆவியின் சட்டதிட்டங்களைச் சுற்றியுள்ள அவர்களுடைய ஐக்கியத்தில் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேவனே எப்பொழுதும் அந்த மனப்பான்மையை உடையவனாயிருக்க எனக்கு உதவி செய்யும் 91 கவனியுங்கள். அவர்கள் தொடர்ந்து சென்றபோது, லோத்து கொழுமையான ஆடுமாடுக்களுக்கான வாய்ப்புகளைக் கண்டான் என்பதை நாம் கண்டறிகிறோம். அநேகர் ஒரு நிரம்பி வழியும் பணப்பையின் வாய்ப்புக்களையே காண்கிறார்கள். அநேகர் ஒரு சிறந்த சமூக அந்தஸ்தின் வாய்ப்புகளையேக் காண்கின்றனர். லோத்து சில கூடுதல் டாலர்களுக்கான சாத்தியக் கூறுகளையேக் கண்டான். அவன் நகரத்தின் நகராண்மைக் கழகத் தலைவராயிருப்பதற்குரிய சாத்தியக் கூறுகளையேக் கண்டான். அவன் ஒரு அந்நியனாய், அழகான அறிவாற்றலுள்ள மனிதனாய் இருந்தபடியால், “நான் இந்தப் பட்டிணத்தின் தலைவர் ஆகிவிடலாம்” என்று எண்ணினான். அவனுக்கு முன்னாலிருந்த அவைகளின் சாத்தியக் கூறுகளையே அவன் கண்டான். ஆனால் அந்த தேசத்தை அழிக்கவிருந்த அக்கினியை அவன் காணவில்லை. அந்த தேசம் முழுவதும் பாவத்தால் நிறைந்திருந்தது, அவன் தன்னை அதனோடு ஒப்புரவாக்கிக் கொள்ளவில்லை, தேவன் அந்த தேசத்தை அழிக்க வேண்டியதாயிருந்தது. 92 இன்றைக்கு ஜனங்கள், “நீங்கள்…?” என்று கூறுவதனால் தங்களை ஒப்புரவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். நான், “நீர் ஒரு கிறிஸ்தவனா?” என்று கேட்டால், 93 அவர்கள், “நான் ஒரு அமெரிக்கன்” என்று கூறுகிறார்கள். ஒரு தவளையாயிருந்ததை ஒரு காகம் என்று கூற முயற்சிப்பதற்கு எவ்வாறு எந்த சம்மந்தக் கிடையாதோ, அவ்வாறே இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒரு முறைத் தட்டுகிறார்.—ஆசி. 94 தேவன் நீதியுள்ளவராயிருக்கிறபடியால் அமெரிக்கா அழிக்கப்பட்ட போவதாயிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய பாவங்களால் தப்பித்துக்கொள்ளுமானால், நீதியும், சர்வ அதிகாரமும் உள்ள பரிசுத்த தேவன் சோதோம் கொமோராவை அவர்களுடைய பாவங்களின் நிமித்தமாக சுட்டெரித்துப் போட்டதற்காக அவைகளை உயிர்த்தெழச் செய்து மன்னிப்புக்கேட்க கடமைபட்டவராயிருப்பார்; அவர் நம்மை நம்முடைய பாவங்களினால் தப்பவிட்டால், அவ்வாறு செய்ய வேண்டியவராயிருக்கிறார். 95 அவர் உங்களுடைய அநீதியான கிரியைகளின் பேரில் நீங்கள் பரலோகம் செல்ல அனுமதிப்பாரானால், அவர் அனனியா, சப்பீராளை உயிர்த்தெழச் செய்து, அவர்களுக்கு மற்றொரு வாய்பினைத் தர வேண்டியவராயிருப்பார். அவர் நிச்சயமாக செய்ய வேண்டும். ஆனால் அவர் நீதியுள்ளவராயிருக்கிறார். அனனியா தன்னுடைய பணத்தைக் கண்டான். பேதுரு கிறிஸ்துவைக் கண்டான். 96 ஓ, என்னே! லோத்து அந்த இடத்தில் தன்னுடைய பிள்ளைகளின் அழிவைக் காணவில்லை. 97 இன்றைக்கு உங்களில் அநேகர், இந்த பழைய சம்பிரதாய கோட்பாடுகள் மற்றுமுள்ள காரியங்கள் சுற்றிலுமிருப்பதையும், இளமை பருவத்தினர் புரியும் குற்றங்களையும், உங்களுடைய பிள்ளைகளின் அழிவையும் நீங்கள் காண்கிறதில்லை. ஒரு விபச்சாரியின் வீட்டில் உங்களுடைய மகள் இருப்பதை நீங்கள் காண்கிறதில்லை. உங்களுடைய மகன் ஒரு குடிகாரனாக அல்லது எங்கோ மேஜையில் சீட்டு விளையாடுவதையும் நீங்கள் காண்கிறதில்லை. 98 “காரணம் சோதோம் செழிப்புற்றிருந்தது.” பாவம் தட்டிக் கேட்கப்படாமலிருந்து. அவன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எல்லா சங்கங்களுக்கும் தலைமையாயிருந்த அவனுடைய மனைவி உப்புத் தூணாக மாறுவதை அவன் காணவில்லை. அவன் ஒரு நொடிப்பொழுதில் எங்கோ ஒரு சிறு பட்டிணத்தில் தன்னுடைய ஜீவனுக்காக மாத்திரம் தப்பிக்கப் போவதாயிருந்ததைக் காணவில்லை. அவன் அதைக் காணவில்லை, ஏனென்றால் அவனுக்கு முன்னால் என்ன இருந்தது என்பதை மாத்திரமே நோக்கிப் பார்த்தான். 99 ஆனால் ஆபிரகாம், அவன் நீர்ப்பாய்ச்சலான தேசத்தைக் கவனிக்கவில்லை, ஏனென்றால் அவன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்து, நாளைய தினத்தையும், அவன் எல்லாக் காரியங்களையும் சுதந்தரிக்கப் போவதைக் கண்டான். இன்றைக்கு உண்மையான கிறிஸ்தவன் தன்னுடைய கண்களை ஏறெடுத்து, கிறிஸ்துவின் வாக்குத்தத்தைக் காண்கிறான். “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எல்லாக் காரியங்களையும் சுதந்தரிப்பார்கள். அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள்.” உண்மையான கிறிஸ்தவன் விசுவாசத்தினாலே, மேல் நோக்கிப் பார்த்து அதைக் காண்கிறான். நீங்கள் என்ன வேண்டுமானாலும் அவனை அழையுங்கள். அவன் தன்னுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்தான். அவன் அதைச் செய்தபோது, தேவனோ, “ஆபிரகாமே, அந்த தேசத்தினூடாக நடந்து செல், அது முழுவதும் உன்னுடையதாயுள்ளது” என்றார். விசுவாசத்தினாலே ஆபிரகாம் இதைச் செய்தான்; அதே விசுவாசத்தை மோசே கொண்டிருந்தான். 100 இது ஒரு உரையாசிரியரால் எழுதப்பட்டு, அது இவ்வாறு கூறப்பட்டிருந்தது. அவை மிக அழகான வார்த்தைகளாயிருந்தன என்றே நான் நினைத்தேன். அந்த ஆபிரகா…“மோசே உலகின் மிகச் சிறந்ததை எடுத்து ஒரு தராசில் வைத்தான்; மற்றொரு தராசில் மோசமான மார்க்கத்தை வைத்தான்; மோசமான மார்க்கமானது உலகின் மிகச் சிறந்ததைவிட அதிக எடை கூடியதாய் இருந்தது.” 101 அது இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது, “மதவெறியர்கள்” அல்லது “தெய்வீக சுகமளிப்பவர்கள்” அல்லது “பரிசுத்த—உருளைகள்” என்று நாம் இவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்ற எந்தக் காரியத்தால் நாம் அழைக்கப்பட்டாலும், அல்லது அவர்கள் எதுவாக அழைக்க விரும்பினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. உலகம் அளிக்கக் கூடிய மிகச் சிறந்ததைக் காட்டிலும் மிக மோசமாயிருக்கிற நாம் அதிக மதிப்புடையவர்களாய் இருப்போம். “பண்டைய—நாகரீகம், தெளிவற்ற பழங்காலத்தவர், மதவெறி” என்றழைக்கப்பட வேண்டாம். அது பிசாசு உங்களுக்கு அளிக்கும்படி பெற்றுள்ள மிகச் சிறந்ததைவிட அதிக மதிப்புடையதாயிருக்கும். அது நிச்சயமாகவே அதிக மதிப்புடையதாயிருக்கும். 102 மோசே கிறிஸ்துவின் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். அவன் கிறிஸ்துவை முன்னதாகக் கண்டான். பின்னர் அவரைக் குறித்த சில வல்லமையான ஆவியின் ஏவுதலைக் கொண்ட வார்த்தைகளைப் பேசினான். “பாருங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்.” அவன் அறிந்திருந்தான். அவன் அவரை முன்னதாகக் கண்டான், அவன் உலகத்தின் எல்லா வசீகரிக்கும் அழகைப் பார்க்கிலும் அவருடைய நிந்தையை மகத்தான ஐஸ்வரியங்களாகக் கருதினான். 103 கிறிஸ்தவ நண்பனே இன்றைக்கு உன்னால் அதைச் செய்ய முடியவில்லையா? எல்லா வசீகரிக்கும் அழகையும், உலகத்தின் புகழையும் காட்டிலும் விசுவாசத்தினாலே வாக்குத்தத்தம் பண்ணின அவரை நாம் காண்கிறோம். இன்றைக்கு மிக மோசமான சபையானது அதனுடைய எல்லா நிலைமையிலும் பிசாசு உங்களுக்கு அளிக்கக் கூடிய ஒவ்வொரு காரியத்தையும் விட இன்னும் அதிக மதிப்புடையதை அளிக்கும். நாம் கிழித்தெறிப்பட்டாலும், நாம் நொறுக்கப்பட்டாலும், நாம் ஸ்தாபனங்களிலும், மதவெறித்தனத்திலும் குழப்பமுற்று, நொறுக்கப்பட்டாலும், பிசாசு உங்களுக்கு அளிக்கக் கூடிய எந்தக் காரியத்தையும் விட அது அதிக மதிப்புடையதாக்கும். நிச்சயமாகவே. 104 அவன் எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். அதன் பின்னர் அவன் ஏதோ ஒன்றை செய்ய வேண்டியதாயிருந்தது. அவன் எகிப்தைவிட்டுப் போனான். ஓ, நான் அந்த வார்த்தையை விரும்புகிறேன். அவன் எகிப்தைவிட்டுப் போனான். பாருங்கள், அவன் அதே ஜன்னலினூடாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான், ஆனால் பார்வோனைவிட வித்தியாசமாக நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். பார்வோன் தன்னுடைய முடிவை பார்த்திருந்தால் என்னவாயிருந்திருக்கும்? பார்வோன் தன்னுடைய தேசம் முழுகுவதை பார்த்திருந்திருந்தால் என்னவாயிருந்திருக்கும்? மோசேயோ அதைக் கண்டான். எப்படி? விஞ்ஞானத்தினாலா? விசுவாசத்தினாலே, மோசே அதைக் கண்டான். விசுவாசத்தினாலே அவன் ஒவ்வொரு காரியத்தையும் செய்தான், ஏனென்றால் தேவன் இந்த தேசத்தை நானூறு வருடங்களுக்குப் பிறகு சந்தித்து அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வரப் போவதாக அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமிடத்தில் வாக்களித்திருந்தார். விசுவாசத்தினாலே மோசே தேவன் கூறியிருந்த வர்த்தையை விசுவாசித்தான், விசுவாசத்தினாலே அவர்களை வெளியேக் கொண்டுவர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவனாயிருந்தான் என்பதை அவன் தானே அறிந்து கொண்டான். அவன் எங்கிருந்தான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவன் தன்னுடைய ஸ்தானத்தை சேற்றுக் குழியில், ஒரு சேறு பூசி மெழுகுபவராக தெரிந்து கொண்டான், எகிப்தின் சிங்காசனத்தில் அமருவதைப் பார்க்கிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். அவன் தெரிந்துகொண்டான்…அவன், “நான் அதனோடு பரிவிரக்கம் கொள்கிறேன்” என்று ஒருபோதும் கூறவேயில்லை. அவன் அவர்களுடைய ஸ்தானத்தேயே தெரிந்து கொண்டு, அவர்களோடு சென்றான்! மகிமை…அவன் அவர்களுடைய ஸ்தானத்தையே தெரிந்துகொண்டான். நாம் அவர்களோடு சென்றோம். 105 ஆவியினால் ஏவப்பட்ட எழுத்தாளன் இவ்வாறு கூறினதில் வியப்பொன்றுமில்லையே: கர்த்தருடைய இழிவாகக் கருதப்பட்ட சிலரோடு அந்த வழியையே நான் தெரிந்து கொள்வேன். நான் இயேசுவோடு உள்ளே துவங்கியிருக்கிறேன், இப்பொழுது நான் அதனூடாக சென்று கொண்டிருக்கிறேன். நான் கானான் தேசத்திற்குப் போகும் என்னுடைய வழியில் இருக்கிறேன். (நிச்சயமாக) 106 மோசே, அவன் பார்வோனின் குமாரனாக, உலகத்தின் வசீகரமான அழகைப் பார்க்கிலும், அவன் பார்வோனின் குமாரனாயிருப்பதற்கு பதிலாக ஆபிரகாமின் குமாரனாயிருப்பதையே விரும்பினான் என்று கூறப்பட்டுள்ளது. பார்வோனின் குமாரனாக, இராஜாவாக இருப்பதைக் காட்டிலும் இழிவாகக் கருதப்பட்ட ஒரு ஆபிரகாமின் குமாரனாயிருப்பதையே விரும்பினான். 107 நான் இந்த மகத்தான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாய், அல்லது ஒரு எல்விஸ் பிரஸ்லியாய் அல்லது ஒரு பாட் பூனாய் அல்லது நீங்கள் நீங்கள் அதை யார் என்று கூற விரும்புகிறீர்களோ அவ்வாறிருப்பதைக் காட்டிலும் இந்த உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஜனங்களோடு என்னுடைய ஸ்தானத்தை தெரிந்து கொண்டு, அவருடைய சக ஊழியனாயிருந்து, கர்த்தராகிய இயேசுவின் குமாரனாயிருக்கவே விரும்புகிறேன். நான் அந்தவிதமாகவே என்னுடைய வழியைத் தெரிந்துகொள்வேன். 108 வாலிப பெண்மணிகள் அந்தவிதமான அவர்களுடைய வழியையேத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு—ஒரு மேரி பிக்ஃபோர்ட்டாக அல்லது ஏதோ ஒரு பெரிய திரைப்பட நட்சத்திரமாக, ஏதோ ஒரு வசீகரமான பெண்ணாயிருப்பதற்கு பதிலாக கர்த்தருடைய இழிவாகக் கருதப்பட்ட சிலரோடு உங்களுடைய வழியைத் தெரிந்து கொள்ளுங்கள். 109 நான் ஒரு நவ நாகரீதத் திரைப்பட துறையான ஹாலிவுட் திரைப்பட நடத்திரமாய் அல்லது பூமியின் மேல் மகத்தான நபராய் இருப்பதைவிட கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியங்களை பிரசங்கிக்கும் பிரசங்கபீடத்தில் உள்ள ஒரு பிரசங்கியாகவே இருக்க விரும்புகிறேன். நான் சாதரண உணவை சாப்பிட நேரிட்டாலும், பிச்சையெடுத்தாலும் அல்லது நான் என்ன செய்ய வேண்டியதாயிருந்தாலும், நான் கர்த்தருடைய ஜனங்களோடே என்னுடைய வழியைத் தெரிந்து கொள்வேன். விசுவாசத்தினால் நான் அதைச் செய்கிறேன். எனக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தேவனுடைய கிருபையினாலே, நான் இன்னமும் விசுவாசத்தினாலே காண்கிறேன். விசுவாசத்தினாலே நான் அதை தூரத்தில் காண முடிகிறது; அங்கு நமக்கு ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ண, நம்முடைய பிதா தூரத்தில் காத்திருக்கிறார். 110 அன்றொரு நாள் வருமானவரித்துறையில் உள்ள ஒரு மனிதன், “நீர் ஏன் உம்முடைய வீட்டுக் கிரயத்தை அந்த சபைக்குச் செலுத்தினீர்? வீட்டின் கிரய மதிப்பான இருபத்தைந்தாயிரம் டாலர்களை அந்த பழைய சிறு குப்பைபோல் காட்சியளிக்கும் கூடாரத்திற்கு உன்னைக் கொடுக்கச் சொன்னது யார்?” என்று கேட்டான். 111 அதற்கு நான், “நான் அதை கூடாரத்துக்கு கொடுக்கவில்லை. அது அங்குள்ள ஜனங்கள் கொடுத்ததாகும்” என்றேன். நான் இந்த உலகப் பொருட்கள் எதையுமே வைத்திருக்கவில்லை. நான் காணிக்கை எடுத்துள்ள ஒவ்வொரு பைசாவையும் இந்த சபைக்கே அளித்துவிடுகிறேன். ஏன்? என்னுடைய விசுவாசம் தேவன் பேரில் உள்ளதேயன்றி இந்த உலகக் காரியங்களின் பேரில் அல்ல. என்னுடைய நேசங்கள் பரத்திலுள்ளவைகளின் மேலுள்ளன. நீங்கள் யாவரும் அதேவிதமாகவே இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன், நீங்கள் தேவனோடு சரியாயிருந்தால் நலமாயிருக்கும். நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்கள் என்பது உண்மையே. நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்கிறோம். நாம் விசுவாசத்தினாலே தேவனை விசுவாசிக்கிறோம். 112 மோசே, அவன் ஒரு தெரிந்துகொள்ளுதலைச் செய்ய வேண்டியதாயிருந்தது, அவன் ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்த பிறகு, அவன் விசுவாசத்திற்காக போராட வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவன் இராஜாவின் கோபத்திற்குப் பயப்படாதிருந்தான். இப்பொழுது, மனிதத் தன்மையோடு பார்த்தால், அவன் கோபத்திற்கு பயப்பட வேண்டியவனாயிருந்தான். அவன் இராஜாவின் கோபத்திற்கு பயப்பட வேண்டியவனாயிருந்தான். ஆனால் அவன் பயப்படவில்லை. அவன் அதைச் செய்யவில்லை, ஏனென்றால் அவனுக்கு செய்யும்படியான ஒரு வேலை இருந்தது, அவன் கடமையின் பாதையில் இருந்தான். அதைக் குறித்து இராஜா என்னக் கூறினார் என்று அவன் கவலைப்படவில்லை. அவன் மாறாத அவருடைய வழியையே தெரிந்தெடுத்துக் கொண்டான். 113 இப்பொழுது, பார்வோன், உண்மையாகவே, அவன் தோற்கடிக்கப்பட்டதை அவன் காண்கிறபோது, அவன் மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும்…கொடுக்க விரும்பினான். அப்பொழுது அவன், “சரி, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லுவேன். நீங்கள் யாவரும் தேசத்தில் தங்கியிருந்துகொண்டே, உங்களுடைய தேவனுக்கு பலி செலுத்த மாத்திரம் செல்லுங்கள்” என்றான். 114 அந்தவிதமாகவே பிசாசு கிரியை செய்கிறான். “ஓ, நீங்கள் பக்தியாயிருக்க முடியும். நீங்கள் ஏன் போய் ஏதோ ஒரு சபையை சேர்ந்து கொள்ளக் கூடாது? நீங்கள் இந்த எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டியதில்லை.” ஒரு மனிதன் தன்னுடைய மனைவியினிடத்தில் கூறுகிறான்… 115 மனைவி, “கணவரே, நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன். இனிமேல் கைவிரல் நக வர்ணம் அல்லது உதட்டுச் சாயம் மற்ற பொருட்கள் வேண்டியதில்லை. இனிமேல் இது வேண்டியதில்லை. இனிமேல் ஆடம்பர விருந்துகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த சங்க சம்மந்தமான காரியங்கள் இனிமேல் வேண்டியதில்லை. நான் அதிலிருந்து வெளியேறிவிட்டேன்! நான் என்னுடைய நேரத்தை வார்த்தையை வாசிப்பதிலும், வீட்டைக் கவனித்துக் கொள்ளுவதில் செலவு செய்வேன்” என்று கூறுகிறாள். 116 அதற்கு கணவனோ, “இப்பொழுது அன்பே பார். நீ, நீ பக்தியாயிருக்கலாம், சரி. இப்பொழுது பார், நீ—நீ இங்கே போகிறாய். நீ தவறான சபையில் சேர்ந்துவிட்டாய்” என்கிறான். 117 இல்லை, நீ தவறான சபையில் இல்லை. நீ சரியான ஒன்றில் தான் இருக்கிறாய். நீ உனக்கு பிரசங்கிக்கும்படியான ஒரு பிரசங்கியைப் பெற்றிருந்தால், நீ அந்த பிரசங்கத்தோடு தரித்திருக்க வேண்டும். அதை வேதவாக்கியங்களினூடாக ஆராய்ந்து பார்த்து, சரியா என்று கண்டறியுங்கள். 118 “ஓ”, “இங்கே செல்லுங்கள். அவர்கள்—அவர்கள் இங்கே அதை செய்ய வேண்டியதில்லை. புரிகிறதா? அவர்கள் இதை இங்கே செய்கிறதில்லை” என்று கூறியுள்ளனர். அந்தவிதமாகவே…“அப்படியே அதுவரை செல்லுங்கள்.” ஆனால் நீங்கள் தேசத்தைவிட்டுச் செல்ல அவன் விரும்பவில்லை. அந்தவிதமாகவே பிசாசு செய்கிறான். நீங்கள் உலகத்தின் காரியங்களைவிட்டுச் செல்ல அவன் விரும்புகிறதில்லை; உலகத்தையே சபைக்குள் கொண்டுவர விரும்புகிறான். 119 அன்றொரு நாள் நான் வீதியில் வந்துகொண்டிருந்தபோது, நான் என்னுடைய வானொலியைத் திருப்பினேன். அப்பொழுது ஒரு—ஒரு பாடல் ஒலித்தது, நான் அதை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன், அப்பொழுது நான் அது ஒரு முழுமையான பக்திப் பாடலாயிருந்தா அல்லது பிசாசு உலகத்தின் நிலைக்கு தேவனுடைய காரியங்களை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறானா என்று இந்த பாடலைக் குறித்து கூறுவதற்கு முன்பு கிட்டத்தட்ட தீர்மானிக்க வேண்டியதாயிருந்தது. உங்களால் அதைச் செய்ய முடியாதே! தேவனே இரக்கமாயிரும்! 120 எல்விஸ் பிரஸ்லி எழுதுகிற எல்லா நல்ல பக்தியான பாடல்களும் எத்தனை தொகுதிகளாயிருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை. அவன் இன்னமும் பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கிறான். இந்த நாளில் முழு உலகிலும் உள்ள திரைப்படங்கள் அனைத்துமே, எனக்குத் தெரிந்த வகையில் பிள்ளைகளை அவைகள் நரகத்திற்கு அனுப்புகிறதைவிட இவன் அதிகமாக அனுப்பிவிடுகிறான். பேட் பூன், மற்றும் அவர்கள் ஏனையோருமே, அவன் கிறிஸ்துவின் சபையைச் சார்ந்தவன்; எல்விஸ் பிரஸ்லி, ஒரு பெந்தேகோஸ்தேகாரன்; அவர்கள் அந்த மனித ரூபத்தில் உள்ள யூதாஸ் காரியோத்தாய் இருக்கிறார்கள். அவர்கள் இங்கே தேவனுடைய உன்னத காரியங்களை இங்கே கலக்கும்படியாக பிசாசு அவைகளை இங்கே கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஜனங்கள் இதை மேல் நோக்கிப் பார்க்கமாட்டார்கள். அவர்கள் இங்கே அப்படியே பார்த்து, “பாருங்கள், அவை யாவும் ஒரே விதமாயுள்ளது” என்று கூறுவார்கள். அது ஒரேவிதமாயிருக்கவில்லை. அந்த தேசத்திலிருந்து வெளியேறுங்கள். 121 பிசாசு, “நீங்கள் சில நாட்கள் போகலாம். நீங்கள் போய் அந்த தேசத்தில் தங்கியிருங்கள்” என்றான். நிச்சயமாகவே, அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அதன்பின்னர் அது கிரியை செய்யாது என்பதை அவன் கண்டறிந்தான், எனவே அவன் வித்தியாசமான ஏதோ ஒரு காரியத்தை யோசித்தான். அப்பொழுது அவன், “நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன். நீங்கள் செல்ல விரும்புகிற எங்கும் புறப்பட்டுச் செல்லுங்கள், ஆனால் நீங்கள் உங்களுடைய எல்லா மனைவிகளையும், உங்களுடைய எல்லா பிள்ளைகளையும், உங்களுடைய எல்லா ஆடுமாடுகளையும் இங்கேயே விட்டுச் செல்லுங்கள். நீங்கள் அவைகளை இங்கே விட்டுவிட்டு, நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்” என்றான். காரணம், அவர்கள் இங்கே உடைமைகளை விட்டுச் சென்றால், அது அவர்களை திரும்பி வரும்படி வசப்படுத்திவிடும் என்பதை அவன் அறிந்திருந்தான். 122 அந்தவிதமாகத்தான் பிசாசு உங்களிடத்தில் கூறுகிறான். உங்கள் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் சில உலகத்தின் காரியங்களை நீங்கள் விட்டுவிடும் வரையில், நீங்கள் இன்னமும் புகைப்பிடிக்க விரும்புவீர்கள், நீங்கள் மது அருந்த விரும்புவீர்கள், நீங்கள் உலகத்தாரைப் போல உடை உடுத்த விரும்புவீர்கள், அதையே பிசாசு நன்கு விரும்புகிறான். 123 பின்மாற்றமடைதலைக் குறித்து அதிகமாக நான் கேள்விப்படுகிறேன். ஜனங்கள் அங்கே நினைக்கிறது போல அவ்வளவு அதிகமாக பின்மாற்றத்தை நான் நம்புகிறதில்லை. அவர்களை திரும்ப வசப்படுத்திக் கொண்டுவரும்படி அவர்கள் எகிப்தில் நிறைய இச்சையான காரியங்களை விட்டுச் சென்றனர், அவ்வளவுதான். அவர்கள் கூறுகிற அது அல்ல பின்மாற்றமடைதல். நீங்கள் உங்களை வசப்படுத்துகிற ஏராளமான உலகக் காரியங்களைக் கூட அங்கே இன்னும் விட்டுவிடவில்லை. 124 சகோதரனே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இஸ்ரவேலர் நடு ராத்திரியிலே புறப்பட ஆயத்தமான போது, அவர்கள் இந்த உலகத்தில் கொண்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் எடுத்துக் கொண்டு போக ஆயத்தமாயினர். 125 தேவனே அதைப் போன்ற ஒரு எழுப்புதலை எங்களுக்கு அனுப்பும். நாங்கள் ஒவ்வொரு காரியத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகிறோம். “நீங்கள் புறப்பட்டு போய் அவரை சந்தியுங்கள்” என்ற ஒரு நள்ளிரவு சத்தம் வருகிறது. நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் ஆயத்தப்படுத்தியிருப்பது சிறந்ததாகும். இந்த உலகத்தில் உங்களை மீண்டும் வசப்படுத்தி, உங்களை வீழ்த்தக் கூடிய எந்த காரியத்தையும் நீங்கள் உடையவராயில்லாமலிருத்தல் சிறந்தது. ஆயத்தமாகுங்கள். நாம் புறப்படுவோமாக. நாம் போய்க் கொண்டிருக்கிறோம். 126 என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நடுராத்திரியிலே பார்வோன் மிகவும் எரிச்சலாகுமளவிற்கு அவர்கள் தேவனுக்கு அவ்வளவு உண்மையாய் இருந்தார்கள். அவன், “வெளியேறுங்கள்! வெளியேறுங்கள், போய்க்கொண்டேயிருங்கள். உங்களுக்குண்டான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய்விடுங்கள்” என்றான். 127 பிசாசு ஒரு மனிதனோடு என்ன செய்யலாம் என்று அறியாத அளவிற்கு அவன் தேவனண்டை மிக நெருக்கமாக ஜீவிக்க முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது உண்மை. வெளியேறுங்கள்! போய்க்கொண்டேயிருங்கள்! தேவனுக்கு கீழ்படியுங்கள்! 128 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தத்தைக் கண்டான். மண் பிசைகிறவன் இல்லை மண் பிசைக்கிறவனாய் அல்ல, அவன் கர்த்தருடைய வெறுத்தொதுக்கப்பட்ட சிலரோடு தன்னுடைய வழியைத் தெரிந்து கொண்டான். பார்வோன், “உங்களுக்குண்டான எல்லாவாற்றையும் எடுத்துக்கொண்டு, இங்கிருந்து வெளியேறுங்கள்! நான் உங்களோடு என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை” என்றான். விசுவாசத்தினாலே மோசே தேவனுக்கு அவ்வளவு உண்மையாயிருந்தான். 129 நீங்கள் தேவனண்டை உண்மையாய்த் தரித்திருந்தால், அப்பொழுது விசுவாசம் அற்புதங்களை நடப்பிக்கும். விசுவாசத்தினாலே நாம் அவரைக் காண்கிறோம். நம்முடைய நேரம் முடிந்துவிட்டது. நேரம் கடந்துவிட்டது. 130 ஆனால் விசுவாசத்தினாலே, இந்தக் காலையில் உங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பாருங்கள். உங்களைச் சுற்றிலும் என்ன உள்ளது என்றும், இந்த நவநாகரீக உலகத்தை நோக்கிப் பார்க்காமல், வாக்குத்தத்தத்தை அளிக்கிற அவரையே நோக்கிப் பாருங்கள். வேதம், “நாம் இப்பொழுது எல்லாக் காரியங்களையும் பரிபூரணமாகக் காண்கிறதில்லை. ஆனால் நாம் இயேசுவைக் காண்கிறோம்” என்று உரைத்துள்ளது. இந்தக் காலையில் நீங்கள் அவரை நோக்கிப் பாருங்கள், அப்பொழுது உங்களுடைய வழிகள் மாற்றப்படும். 131 ஜெபத்திற்காக நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் தாழ்த்துகையில், கர்த்தர் இந்த செய்தியோடு தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. 132 இப்பொழுது உங்களுடைய இருதயத்தில் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் உலகத்தின் காரியங்களை நோக்கிக் கொண்டிருக்கிறீர்களா? விசுவாசத்தினால், நீங்கள் இயேசுவைக் காண்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய புகழை, உங்களுடைய சபையை நோக்கிக் கொண்டிருக்கிறீர்களா? உலகத்தோடுள்ள உங்களுடைய சகவாச நிலை என்னவாயுள்ளது? அல்லது அநீதியுள்ளவர்களுக்காக நீதிமானாய், ஒரு இரத்த சாட்சியாய் பாடுபட்டு, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்தில் தாமே வீற்றிருக்கிற இரக்கமுள்ள இயேசுவை நீங்கள் காண்கிறீர்களா? உங்களுடைய கண்களை நீங்கள் ஏறெடுத்து, அப்பால் உள்ள அந்த ஜீவ விருட்சத்தைக் காண முடியவில்லையா? அப்படியானால் இந்த விஞ்ஞான மற்றும் அறிவுப்பூர்வமான விருட்சத்தை விட்டுவிட்டு அவரை சேவியுங்கள். 133 நான் ஜெபிப்பதற்கு முன்பாக நீங்கள் ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய தேவையைக் குறித்த ஏதாவது வேண்டுகோள் இருக்குமாயின், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர் உங்களுடைய எல்லா கரங்களையும் காண்கிறார். 134 நீங்கள் ஒரு பாவியாயிருந்தால், உங்களுடைய கண்களை ஏறெடுத்து இப்பொழுதேப் பாருங்கள். நீங்கள் அலட்சியமுள்ளவர்களாயிருந்து வந்திருந்தால், நீங்கள் சிறு சச்சரவுகளையும் மற்றும் சிறு காரியங்களையும் உடையவராயிருந்து வந்திருந்தால், அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நீங்கள் இந்நாட்களில் ஒன்றில் மரிக்கப் போகிறீர்கள். எந்த நாளில்? ஒருக்கால் இன்றைக்காயிருக்கலாமே! உங்களுக்குத் தெரியாது. இப்பொழுதிலிருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் நீங்கள் நரகத்தில் இருக்கலாம், அல்லது நீங்கள் பரலோகத்தில் இருக்கலாம். ஆனால் நீங்கள் இப்பொழுதே தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய ஜீவியத்தில் சரியில்லாத காரியம் ஏதாவது இருக்குமாயின், நீங்கள் விசுவாசத்தினாலே இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். 135 நீங்கள், “பாருங்கள், என்னால் அவள் செய்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லையே! என்னால் அவன் செய்ததையும் கூட பொருத்துக் கொள்ள முடியவில்லையே!” என்று கூறலாம். அவர்கள் என்ன செய்திருந்தாலும் பொருட்படுத்தாமல் ஜீவனை தெரிந்து கொள்ளுங்கள். ஜீவனை தெரிந்து கொள்ளுங்கள். 136 இயேசு, “நீங்கள் உங்கள் இருதயத்திலிருந்து ஒவ்வொரு நபரின் தப்பிதங்களையும் அவர்களுக்கு மன்னிக்கவில்லையென்றால், அப்பொழுது உங்களுடைய பரலோகப் பிதா உங்களை மன்னிக்கமாட்டார்,” என்றார். எனவே அதை கவனமாக புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இருதயத்தில் எந்த நபருக்கு எதிராக, பாவிக்கெதிராகவோ அல்லது ஒரு பரிசுத்தவானுக்கெதிராகவோ ஒரு குற்ற உணர்வு கொண்டிருந்தால், நீங்கள் நரக அக்கினியின் அபாயத்தில் இருக்கிறீர்கள். 137 இப்பொழுது உங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பாருங்கள். நீங்கள் உங்களுடைய சத்துருவைக் காண்கிறீர்களா? அல்லது நீங்கள் உங்களுடைய இரட்சகரைக் காண்கிறீர்களா? நீங்கள் இந்தக் காலையில் யாரை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? 138 நீங்கள் சுகவீனமாயிருந்து, நீங்கள் சுகமடைய முடியாது என்று உங்களுடைய மருத்துவர் கூறினால், உங்களுடைய கண்களை சிலுவையண்டை ஏறெடுத்துப் பாருங்கள், அங்கே அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமானோம். மருத்துவர் என்ன கூறுகிறார் என்பதை நோக்கிப் பார்க்காதீர்கள்; அவர் விஞ்ஞானத்தின்படி கிரியை நடப்பித்துக் கொண்டிருக்கிறார். விசுவாசமோ ஆவிக்குரிய மண்டலத்திலும், தேவனிலும் கிரியை செய்கிறது. நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கையில், இந்தக் காரியங்களைக் குறித்து நாம் இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போமாக. தேவன் அவைகளைக் கண்டார். நாம் ஜெபம் செய்வோமாக. 139 ஓ நித்திய தேவனே, இப்பொழுது இந்த அமைதியான ஆராதனையில், செய்தி கொடுத்து முடித்துவிட்டப் பிறகு, கர்த்தாவே, உம்முடைய வார்த்தையின் அந்த விதைகள் கற்பாறையான நிலத்தில் விழச் செய்யாதேயும். கர்த்தாவே, செய்தியானது நெரிஞ்சில்களிலும், முட்களிலும் விழச் செய்யாதேயும், அவை இந்த ஜீவியத்தின் கவலைகளை (லோத்தைப் போல) நெருக்கிப் போட்டு, முடிவிலே எறிந்து போடச் செய்யும். ஆனால் ஓ, ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே, அது நல்ல, செழிப்பான நிலங்களில், செய்த தவறுக்காக மனம் வருந்துகின்ற இருதயங்களில் விழட்டும். நானும் கூட கர்த்தாவே, அதாவது நாங்கள் யாவரும் நோக்கிப் பார்க்கும் தேவனுடைய கண்ணாடியினூடாக நோக்கிப் பார்த்து, புறக்கணிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் சபையை, புறக்கணிக்கப்பட்ட ஜனங்களை, புறக்கணிக்கப்பட்ட வழியைக் கண்டு, நாங்கள் இந்த மகிமையான வழியில் நடப்போமாக. 140 மோசே, அவன் எங்கே நடந்து கொண்டிருந்தான் என்பதை அறியாதிருந்ததுபோலவே, ஜனங்கள் எங்கே சென்று கொண்டிருந்தனர் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவர்கள் எந்த வழியாய்ச் செல்ல வேண்டும் என்பதை அறியாதிருந்தனர். அவர்கள் அப்படியே புறப்பட்டிருந்தனர். 141 ஓ, தேவனாகிய கர்த்தாவே, இந்த அழகானப் பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், எங்களால் விசுவாசத்தினால் அந்த தூர தேசத்தைக் காண முடிகிறது. அது அப்படியே இப்பொழுது இருப்பதாக, அதாவது இங்குள்ள புருஷர்களும் ஸ்திரீகளும் உலகம் என்னக் கூறப் போகிறது அல்லது அவர்கள் எப்படி போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்து சிந்திக்காதிருப்பார்களாக. அவர்கள் தங்களுடைய ஆவியில் எழும்பிச் செல்வார்களாக. 142 மோசே வெளிச்சத்தைப் பின் தொடர்ந்தான், அது அவனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தினது. அவன் எங்கே சென்று கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் பகலைப் பார்க்கிலும் பிரகாசமான அந்த தேசத்திற்கு வெளிச்சத்தில் அவன் அப்படியே நடந்தான். 143 கர்த்தாவே இங்குள்ள அநேகர் வேதாகம வெளிச்சத்தில் நடந்து, பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் சபையோடு, முதற்பேறானவர்களின் சபையோடு, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டுள்ள புதியதாய்ப் பிறந்த குழந்தைகள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, ஆவியானவரால் வழி நடத்தப்பட இன்றைக்கு அருள் புரியும். நாங்கள் இந்த ஐக்கியத்தில் தேவனுடைய நிபந்தனைகளைச் சுற்றிலும் ஒருங்கே நடந்து, ஞானஸ்நானத்தில் அவரை சேவித்து, அவருடைய மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலில் கீழ்படிவோமாக. “நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்” என்ற அவருடைய கட்டளையில் அவரை நாங்கள் சேவிப்போமாக. நாங்கள் தெய்வீக சுகமளித்தலில் அவரை சேவித்து, வியாதியஸ்தருக்காக ஜெபிப்போமாக. நாங்கள் அவரை இராபோஜனத்தில், அப்பம் பிட்குதலில் ஒருமனப்பட்டவர்களாய் பங்கு பெற்று, வார்த்தையின் பேரில் ஐக்கியங்கொள்வோமாக. தேசமானது காட்சியில் வரும் வரையில் அவருடைய தெய்வீக நிபந்தனைகள் யாவற்றிலும் நாங்கள் அவரை சேவிப்போமாக. கர்த்தாவே, இதை அருளும். இப்பொழுது நாங்கள் இவை யாவற்றையும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்மண்டை சமர்ப்பிக்கையில் எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும். 144 இப்பொழுது நம்முடைய தலைகள் தாழ்த்தியிருப்பதோடு, அமைதியாக, மெதுவாக நாம் இந்தப் பாடலைப் பாடுவோமாக. இப்பொழுது இது ஆராதனையாயுள்ளது. செய்தியானது முடிவுற்றுவிட்டது. யாவரும் போக வேண்டாம். அப்படியே அமைதியாயிருங்கள். நாம் ஆராதிப்போமாக. 145 செய்தியானது திருத்திக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்றும், நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்றும், நீங்கள் இன்றைக்கு இருக்கிறப்பிரகாரமாயிருக்கும்படி செய்தது எது என்றும் சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு உங்களை கண்டனம் செய்கிறது எதுவென்றால், நேற்று நீங்கள் செய்த ஒரு காரியத்தினாலேயாகும். அது நாளை என்னவாயிருக்கும்? அதை இன்றைக்கே சரி செய்து கொள்ளுங்கள், நீங்கள் நாளை விடுதலையாயிருப்பீர்கள். புரிகிறதா? நீங்கள் ஒரு தெரிந்து கொள்ளுதலைச் செய்ய வேண்டும். நீங்கள் அதை எப்படி செய்ய முடியும்? “விசுவாசத்தினாலே நாம் இப்பொழுது ஒவ்வொரு காரியத்தையும் விட்டுவிடட்டும், நான் இப்பொழுதே விட்டுவிடட்டும், என்றோ ஒரு நாள் நான் அப்பால் உள்ள அங்கு செல்லப் போகிறேன்.” நாம் அந்த அழகான… சீக்கிரத்தில் இனிமையாய் சந்திப்போம் இப்பொழுது உங்களுடைய ஆவியில் கர்த்தரை அப்படியே ஆராதியுங்கள். நாம் அந்த இழிவாகக் கருதப்பட்ட சபையை சீக்கிரத்தில் இனிமையாய் சந்திப்போம். (செல்ல கடினமாயுள்ளது, ஆனால் நாம் என்றோ ஒரு நாள் சந்திப்போம்) சம்பூரணரான நம்முடைய பிதாவுக்கு நாம் நம்முடைய துதியின் காணிக்கையை செலுத்துவோம், ஏனென்றால் அவருடைய அன்பின் மகிமையான வெகுமதி நம்முடைய…பரிசுத்தமாக்கும் ஆசீர்வாதங்கள்… விசுவாசத்தினால் நான் கர்த்தருடைய இழிவாகக் கருதப்பட்ட சிலரோடு என் வழியைத் தெரிந்துகொள்கிறேன். நாம் அந்த அழகான கரையில் (சீக்கிரத்தில்) இனிமையாய், (இனிமையாய்)…(சீக்கிரத்தில்) சந்திப்போம்; நாம் அந்த அழகான கரையில் சீக்கிரத்தில் இனிமையாய் (இனிமையாய்) சந்திப்போம். அங்கே ஒரு தேசம் உண்டு… அப்படியே அவரை ஆராதியுங்கள். இது ஆராதனையாயுள்ளது. …விசுவாசத்தினால் என்னால் காண முடிகிறது, விசுவாசத்தினால் நான் என்னுடைய தெரிந்துகொள்ளுதலைச் செய்கிறேன். ஓ, பிதா காத்திருக்கிறார்… 146 கர்த்தருடையவர்கள் யாவரும் அங்கிருப்பதை நான் காண்கிறேன்; சகோதரன் ஜியார்ஜ், சகோதரன் ஸ்டூவர்ட், எல்லா பரிசுத்தவான்களுமே. …அங்கே நமக்கு ஒரு வாசஸ்தலம்…(ஆம், கர்த்தாவே!) இனிமையாய்… 147 அவளுடைய தந்தை, ஹாவர்ட், எட்வர்ட், நீண்ட காலத்திற்கு முன்னர், அந்த வழியைத் தெரிந்துகொண்ட பண்டைய பரிசுத்தமாக்கப்பட்ட நண்பர்கள் யாவரும், அங்கே அப்பால் உள்ளனர். நாம் அந்த அழகான கரையில், இனிமையாய் (ஆம், கர்த்தாவே!) சீக்கிரத்தில் (சீக்கிரத்தில்) சந்திப்போம். நாம் அந்த அழகான…(ஓ தேவனே!) ஆசீர்வாதமான இனிமையான கீதங்களைப் பாடுவோம்,(தேவனுக்கு மகிமை!) …அங்கு துயரமே இருக்காது, அந்த ஆசீர்வாதமான அமைதியான இடத்தில் பெருமூச்சுவிடுதலே இல்லை நாம் அந்த அழகான… இனிமையாய், இனிமையாய்…(சீக்கிரத்தில்) சந்திப்போம்.  Rev. William Marrion Branham